Police Department News

குற்றவியல் நடைமுறைச் சட்டம் CrPC 110 பிரிவை பயன்படுத்தும் அதிகாரம் காவல்துறைக்கு இல்லை

குற்றவியல் நடைமுறைச் சட்டம் CrPC 110 பிரிவை பயன்படுத்தும் அதிகாரம்
காவல்துறைக்கு இல்லை

வழக்கமாக குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் ( Habitual Offenders)இனி நாங்கள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கமாட்டோம் என்று கோட்டாட்சியர் அவர்களிடம் உறுதி அளிப்பது தொடர்பாக விவரிக்கிறது குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு CrPC 110 .

வழக்குகள் உள்ள நபர்,
வழக்கமாக குற்றம் செய்யும் நபர் (Habitual Offender ) இரண்டு பிரிவுக்கும் வித்தியாசம் உண்டு.

ஆனால் ஒருவர் மீது வழக்குகள் நிலுவையில் இருந்தாலே போதும் உடனே இந்த சட்டப்பிரிவை அவர்கள் மீது பயன்படுத்துகிறது காவல்துறை .

இந்த 110 பிரிவை பொறுத்தவரை சட்டம் 1% அதிகாரத்தை கூட காவல்துறைக்கு அளிக்கவில்லை . அவர்களுக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் பணி என்பது சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்க கூடியவர்கள் என்று வழக்கமாக குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை மட்டும் அடையாளம் கண்டு கோட்டாட்சியர் அவர்களிடம் பட்டியலை சமர்ப்பிப்பது மட்டுமே .

அந்த பட்டியலை எந்த அடிப்படையில் தயாரிக்க வேண்டும் ??

தனிநபர் விபரம் :

சாதி , வாழ்வாதாரம் , அந்த நபரின் குடும்ப உறுப்பினர்கள் , அவரின் வருமானம் , அவரின் சொத்து மதிப்பு
ஆகியவற்றை சேகரிக்க வேண்டும் .

வாழ்க்கைமுறை :

பட்டியலில் சேர்க்கப்பட்டு இருக்கும் நபர் வீட்டில் இயல்பாக வசிக்கிறாரா ? இல்லை தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறாரா ? இரவு நேரங்களில் மட்டும் வீட்டுக்கு வருகிறாரா ? என்பதை அந்த பகுதியில் இருக்கும் நபர்களிடம் கேட்டு தெரிந்துக்கொள்ள வேண்டும் . இந்த தகவல்கள் வெறும் செவிவழி செய்தியாகமட்டுமே இருத்தல் கூடாது .தலைமறைவு வாழக்கை வாழ்வதற்கான உறுதியான ஆதாரங்கள் தேவை .

நட்பு வட்டாரம் :

பட்டியலில் சேர்க்கப்பட்டு இருக்கும் நபர் யாரை சந்திக்கிறார் ? சந்திக்கும் அந்த நபரின் குற்றப்பின்னணி என்ன ? அவர் வீட்டுக்கு வரும் நபர்கள் யார் ? ஏதாவது சதி செயல்களில் ஈடுபடுகிறாரா ? என்பதை கண்டறிய வேண்டும் .

குற்ற பின்னணி :

பட்டியலில் இருக்கும் நபரின் குற்ற பின்னணி குறிப்பாக ஏற்கனவே தண்டனை பெற்ற நபரா என்பதையும் கண்டறிய வேண்டும் . இதோடு சேர்த்து காவல்துறை சில குறிப்புகளை எழுதவேண்டும் .

மேற்சொன்ன குறிப்புகளுக்கு ஆதரவாக இரண்டு சாட்சிகளும் இருக்க வேண்டும்

அதை தொடர்ந்து CrPC 107 இன் கீழ் கோட்டாட்சியர் அவர்கள் ஏன்? உங்கள் மீது Crpc 110 கீழ் நடவடிக்கை எடுக்க கூடாது என்று சம்பந்தப்பட்ட நபரிடம் அறிவிப்பு / விளக்கம் கேட்கவேண்டும் .

இதற்கு பதில் அளிக்க சம்மந்தப்பட்ட நபருக்கு வாய்ப்பு வழங்கவேண்டும் .

எழுத்துவடிவில் மறுப்பு சொல்லவும் ,வாய்மொழியாக மறுப்பு சொல்லவும் அவருக்கு உரிமை உண்டு .

ஒருவேளை காவல் துறை தவறான தகவல்கள் அடிப்படையில் கோட்டாட்சியரிடம் பட்டியலை சமரிப்பித்து இருந்தால் விசாரணை முடிவில் சம்பந்தப்பட்ட நபர் மீது 110 பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டிய அவசியம் இல்லை என்று கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பிக்கலாம் .

இந்த 110 பிரிவு வழக்கமாக குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு மட்டுமே பொருந்தும் .

ஒருவரை 110 பிரிவின் கீழ் கொண்டுவர காவல்துறை பட்டியல் தயாரிக்கும் போது அந்த நபர் குறித்து ஆய்வுகளை செய்யவேண்டும் . காவல்துறை அவர் சொன்னார் இவர் சொன்னார் என்றெல்லாம் காதில் கேட்டதை வைத்து முடிவு செய்யக்கூடாது .

  • இந்த காலத்தில் ஒரு வழக்கை காவல்துறை பதிவு செய்யும் பட்சத்தில் CrPC 122 (1)(b) யை பயன்படுத்தி உறுதி பத்திரத்தை மீறியதற்காக ஓர் ஆண்டுகாலம் வரை தடுப்பு காவலில் வைக்கவும் நடவடிக்கை எடுக்க முடியும் .

இந்த CrPC 110 பிரிவை குற்றம் செய்வதையே தொழிலாக கொண்டு இருப்பவர்கள் மீது பெரும்பாலும் ஏவ முடிவதில்லை காரணம் தொடர் குற்றம் செய்பவர்கள் தொலைபேசி எண்களை மாற்றிவிட்டு தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறார்கள் .

மாநகராட்சி பகுதிகளில் காவல் துறை துணை ஆணையர்களுக்கு crpc 110 பிரிவை பயன்படுத்தும் அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது .அதுவும் காவல்துறை அதிகாரியாக அல்ல நிர்வாகதுறை நடுவராக வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.