தமிழ்நாடு ஊர்காவல் படையை பற்றி தெரிந்து கொள்வோம்
தமிழ் நாடு ஊர் காவல் படை தமிழ்நாடு காவல் துறைக்கு துணையாக செயல்படும் தன்னார்வப் படையாகும். இந்திய – சீனா போருக்குப் பின்னர் இந்தியக் காவல்துறைக்கு உதவிட 1962-இல் ஊர் காவல் படை அமைப்பு நிறுவப்பட்டது. 18 முதல் 50 வயது உள்ள தன்னார்வம் கொண்ட அனைத்து தரப்பு இளைஞர்களை ஊர்காவல் படைக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். ஊர் காவல் படையில் குறைந்தபட்ச சேவைக்காலம் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும். இந்தியாவின் 25 மாநிலங்களில் ஊர் காவல் படையில் 5,73,793 நபர்கள் உள்ளனர். உள்நாட்டு பாதுகாப்பிற்கு காவல்துறையுடன் உதவுவது.
போர்க் காலங்களில் விமான குண்டு வீச்சிலிருந்து தற்காத்து கொள்வதற்கு மக்களை பயிற்றுவிப்பது மற்றும் இயற்கை சீற்றங்களிலிருந்து மக்களை காக்க உதவுதல்.
நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் நேரடியாகவும், மறைமுகவும் இக்கட்டான நிலைகளில் அவசரப்படையாகவும் செயல்படுதல்.
அவசர காலங்களில் மோட்டார் வாகனங்கள் ஓட்டுதல், தீயணைப்பு பணி மேற்கொள்தல், மருத்துவ செவிலியர் பணிகள், முதலுதவி, தகவல் தொடர்பு வழங்குதல் போன்ற பணிகளை இவர்கள் மேற்கொள்வர்.
போக்குவரத்தை சரி செய்தல், திருவிழா, பண்டிகை நேரங்களில் கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களில், கூட்டத்தை ஒழுங்கு படுத்துதல், தலைவர்கள் வருகையின் போதும், அரசியல் கட்சிகள், சங்கங்களின் பொதுக்கூட்டம், சட்டம் ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படும் என கருதப்படும் நேரங்களில், பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுத்தப்படுகின்றனர். சில நேரங்களில் மாநகர ஆயுதப்படை, அதிகாரிகளின் வாகனங்களை இயக்கவும், நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் வாரன்டுகளை வழங்க முடியாமல் போலீசார் மிகுந்த சிரமத்தை சந்தித்து வந்தனர். இந்த குறைகளையும், அதற்கான தற்காலிகமாக தீர்வு காணும் வகையில், போலீசார் மேற்கொள்ளும் பணிகளை, ஊர்க்காவல் படையை சேர்ந்தவர்களை ஈடுபடுத்த படுகிறார்கள்