தமிழ் நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணி பற்றி தெரிந்து கொள்வோம்.
தமிழ் நாடு அரசு வழங்கும் இன்றியமையாத தேவைகளில் தமிழ் நாடு தீயணைப்பு மீட்பு சேவையும் அடங்கும். “காப்பதே எமது கடமை” என்ற குறிக்கோளுடன் இவ்வரசு சேவை இயங்குகின்றது.
தீயணைப்புத் துறையானது முதன் முதலில் இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட சேதத்தால் பிரிட்டன் அரசால் உருவாக்கப்பட்டது தீயணைப்புத்துறை. தமிழ்நாட்டில் சென்னையில் முதன் முதலில் தீயணைப்புதுறை கொண்டுவரப்பட்டது. அதன் பின்பு தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்தில் ஒரு தீயணைப்பு நிலையம் ஏற்படுத்தப்பட்டு தற்போது தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை என்று செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு கோட்ட அலுவலர் வீதம் இருந்து நிறுவாகம் செய்து வருகிறார்கள். தீயணைப்புத்துறைக்கு ஒரு இயக்குனரும் 5 துணை இயக்குனர்களும் இருந்து வருகிறார்கள். 25 கி. மீ தூரத்திற்கு ஒரு தீயணைப்பு நிலையம் நிறுவப்பட்டு இயங்கி வருகிறது.