இன்று சர்வதேச மகளரிர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் பணிபுரியும் மகளிர் அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல்துறையினர்களுக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் மகளிர் தின வாழ்த்து.
♻️தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் பணிபுரியும் மகளிர் அமைச்சுப்பணியாளர்களில் அலுவலக கண்காணிப்பாளர் திருமதி. மாரியம்மாள் அவர்கள் தலைமையில் கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள், இளநிலை உதவியார்கள் என 22 பெண் அமைச்சுப்பணியாளர்கள், மாவட்ட குற்றப்பிரிவு, மாவட்ட குற்ற ஆவண காப்பகம் மற்றும் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு ஆகியவற்றிலிருந்து காவல் ஆய்வாளர் திருமதி. தேவி, திருமதி. ஜெரால்டின் வினு ஆகியோர் தலைமையில் 15 பெண் காவல்துறையினர் பணியாற்றி வருகின்றனர்.
♻️இன்றைய மகளிர் தினத்தை முன்னிட்டு மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் மேற்படி மகளிர் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் முன்னிலையில் கேக் வெட்டி மகளிர் தினத்தை கொண்டாடினர்.
♻️அதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப்பணியாளர்களும் அனைத்து வகையான செல்வங்களுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் பல்லாண்டு வாழவும், சிறப்பாக பணியாற்றவும் வாழ்த்து தெரிவித்தார்.