நம் கண் முன்னாடியே ஒரு குற்றம் நடக்கின்றது, அதை கிராம நிர்வாக அதிகாரியிடமும் புகார் அளிக்கலாம்
உரிமையியல் / குற்றவியல் எந்த பிரச்சனைகளை தடுக்கவும், நாம் கிராம நிர்வாக அலுவலரை அணுகலாம். குற்றவிசாரணை முறை விதி 36 ன் படி காவல் ஊழியர்கள் தங்கள் ஊழியம் செய்யும் பகுதிக்குள் குற்றம் நடைபெறாமல் தடுக்க வேண்டிய கடமை எவ்வாறு விதிக்கப்படுள்ளதோ, அதே போல, ஒவ்வொரு கிராம நிர்வாக அலுவலருக்கும் தங்கள் பணி புரியும் கிராம எல்லைக்குள் எந்த ஒரு குற்ற செயலும் நடை பெறாமல் தடுக்க வேண்டியது ஒரு கிராம நிர்வாகியின் கடமைகளில் ஒன்று என்பதால், குற்ற செயலை காணும் போது, காவல் துறையில் தான் தெரிவிகக் வேண்டும் என்பதில்லை. அது குறித்து உங்கள் கிராம நிர்வாகியிடம் புகார் மனுவாக பதிவு அஞ்சலில் அனுப்புங்கள்.
அவர் நடவடிக்கை எடுக்கவில்லை எனில், இந்திய தண்டணை சட்ட பிரிவு 119 படி, (ஒரு குற்றத்தை தடுக்க தவறிய அரசு ஊழியருக்கும், குற்றவாளிக்கு அளிக்கபடும் தண்டணைகளில் பாதி தண்டணை விதிக்கபடும்) தன்டிக்கத்தக்க குற்றம் என்பதை அவருக்கு ஒரு நினைவூட்டல் கடிதம் அனுப்பலாம், இதற்கு பல வகைகளில் நிச்சயம் பலன் இருக்கும்.