Police Department News

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, சென்னையில் தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்டு வரும் வாகன சோதனை பணியினை சென்னை பெருநகர காவல் ஆணையர் பார்வையிட்டார்

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, சென்னையில் தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்டு வரும் வாகன சோதனை பணியினை சென்னை பெருநகர காவல் ஆணையர் பார்வையிட்டார்

வருகிற 06/04/21 ம் தேதியன்று தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற போவதை தொடர்ந்து சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு. மகேஸ்குமார் அகர்வால் IPS அவர்களின் உத்தரவின்பேரில் சென்னை பெருநகரில் உள்ள வாக்குச்சாவடிகள், மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் தேர்தல் பாதுகாப்பு தொடர்பான பணிகள் துரிதமாக செயல்பட்டு வருகிறது. மேலும் சென்னை பெருநகரில் குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், மக்கள் அச்சமின்றி வாக்களிக்கவும் உரிய பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தவும் சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள், காவல் ஆளினர்கள், மற்றும் பிற மாநிலங்களிலிருந்து பாதுகாப்பு பணிக்காக வந்திருக்கும் மத்திய துணை ராணுவப்படையினர் ஒருங்கிணைந்து முக்கிய மக்கள் கூடும், மற்றும் வசிக்கும் இடங்களிலும் கொடி அணிவகுப்பு நடைத்தி வருகின்றனர்

மேலும் தேர்தல் பறக்கும் படையுடன் சென்னை பெருநகர காவல் ஆளினர்கள் அடங்கிய குழுவினர், சென்னை பெருநகரில் முக்கிய இடங்களில் வாகனச் சோதனையில் ஈடுபட்டு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் தேர்தல் விதி முறைகளை மீறுபவர்கள் கண்டறியப்பட்டு சட்டநடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு. மகேஷ்குமார் அகர்வால் IPS அவர்கள் நேற்று மதியம் வாகன்தணிக்கைகள் நடைபெரும் இடங்களின் ஒன்றான அமைந்தக்கரை, ஸ்கைவாக் சிக்னல், அருகில் நடைபெற்று வரும் தேர்தல் பறக்கும் படையினரின் தேர்தல் வாகனத்தணிக்கை பணியினை பார்வையிட்டு தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் காவல் ஆளினர்களுக்கு சென்னை பெருநகர காவல் துறை சார்பில் உரிய பாதுகாப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளது குறித்து உரிய வழிகாட்டுதல்படி வாகனத்தணிக்கை நடைபெறுகிறதா என பார்வையிட்டார்.

இந்நிகழ்வின் போது சென்னை, அண்ணாநகர், துணை ஆணையானர் திரு.ஜி ஜவஹர் IPS மற்றும் காவல் அதிகாரிகளும் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.