திருவள்ளூர் அருகே குன்னத்தூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியை சுஜாதா, நேற்று முன்தினம் மதியம் 3.30 மணியளவில், வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, மர்ம இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் பள்ளிக்குள் வந்தார். சுஜாதா அவரை விசாரித் துள்ளார்.
‘‘நான் தொடக்க கல்வி அலுவலரை சந்தித்துவிட்டு வந்துள்ளேன். மாணவர்களுக்கு கல்வி சம்பந்தமான குறும்படத்தை திரையிட்டுக் காட்ட விரும்புகிறேன். மாணவர்களுக்கு குறும்படம் திரையிட்டு காட்ட உரிய தேதி, நேரம் ஒதுக்கித் தாருங்கள்’’ என கேட்டுள் ளார் அந்த மர்ம இளைஞர்.
‘‘உயரதிகாரியிடம் பேசிவிட்டு, தக வல் சொல்கிறேன்’’ என சுஜாதா கூறிவிட்டு, மீண்டும் வகுப்பறைக்குச் சென்ற போது, பின் தொடர்ந்து வந்த மர்ம இளைஞர், சுஜாதா கழுத்தில் இருந்த சங்கிலியை பறிக்க முயன்றார். தடுக்க முயன்ற சுஜாதாவின் கையை முறுக்கி, 8 பவுன் சங்கிலியின் பாதியை பறித்துவிட்டு தப்பி யோடி விட்டார்.
இதைத் தடுக்க முயன்ற மாணவர் ஒருவரையும் பெண் ஒருவரையும் தள்ளிவிட்டு, அந்த மர்ம நபர் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து, வழக்கு் பதிவு செய்த மப்பேடு போலீஸார், சங்கிலி பறித்த மர்ம இளைஞரை தேடி வருகின்றனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், பூந்தமல்லி அருகே உள்ள திருமணம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளி வளாகத்துக்குள் இதேபோல் மர்ம இளைஞர் ஒருவர் புகுந்து, பள்ளி ஆசிரியையிடம் தங்கச் சங்கிலி பறித்துவிட்டு ஓடிய சம்பவம் அரங்கேறியது.
அதே பாணியில் இப்போது இந்த சம்பவம் 2-வது முறையாக குன்னத்தூர் கிராமத்தில் நடந்துள்ளது.
தொடர் சம்பவங்களால் பாதுகாப்பில்லாத நிலையில் உள்ள அரசு பள்ளி ஆசிரியைகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.