கரூர் : மனநலம் பாதிக்கப்பட்டவர்களை சுத்தம் செய்து¸ உணவு¸ உடை கொடுத்து காக்கும் தலைமை காவலர் கரூர் மாவட்டம்¸ மாயனூர் காவல் நிலைய தலைமை காவலர் திரு. அருண் அவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டு ஆதரவற்று சுற்றி திரிந்து வருபவர்களை சுத்தம் செய்து¸ உணவு¸ உடை கொடுத்து¸ மனநல காப்பகத்தில் ஒப்படைத்து வருகிறார். இதுவரை 15க்கும் மேற்பட்ட நபர்களை மனநல காப்பகத்தில் ஒப்படைத்துள்ளார்.
Author: policeenews
துப்பறியும் மோப்ப நாய் இறப்பு : காவல் இறுதி மரியாதையுடன் நல்லடக்கம்
துப்பறியும் மோப்ப நாய் இறப்பு : காவல் இறுதி மரியாதையுடன் நல்லடக்கம் திருவாரூர் மாவட்டத்தில் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் பணியிலிருந்த முகில் என்ற துப்பறியும் மோப்பநாய் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தது. 07.01.2019ம் தேதியன்று முகிலுக்கு காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
நம்மள மாதிரிதான அவங்களும் கஷ்டப்படுவாங்க!’- கோவை பெண்ணை
நம்மள மாதிரிதான அவங்களும் கஷ்டப்படுவாங்க!’- கோவை பெண்ணை நெகிழவைத்த ஆட்டோ ஓட்டுநர்கோவையில், சாலையில் கிடந்த நகையைக் காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநருக்குப் பாராட்டுகள் குவிந்துவருகின்றன. கோவை, திருச்சி சாலை சுந்தரேச ஐயர் லே அவுட் பகுதியைச் சேர்ந்தவர் காயத்திரி. இவர் தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் நிர்வாக அலுவலராகப் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், பிரபல தங்க நகைக்கடை ஒன்றில் நகை சேமிப்பு திட்டத்தில் தவணை முறையில் பணம் கட்டி வந்துள்ளார். தவணை முடிந்த நிலையில், நேற்று 38.896 […]
16 நாட்கள் 400 கி.மீ. பயணம், 460 சி.சி.டிவிக்கள் சோதனை: சொந்தமாக
16 நாட்கள் 400 கி.மீ. பயணம், 460 சி.சி.டிவிக்கள் சோதனை: சொந்தமாக நகைக்கடை நடத்திய கொள்ளையர்கள் சிக்கிய சுவாரஸ்ய கதை : நெல்லை காவல்துறையின் சபாஷ் நடவடிக்கை நெல்லையில் குல தெய்வம் கோயிலுக்கு சாமி கும்பிட வந்த இடத்தில் கொள்ளையடித்து தப்பிச் சென்ற திருப்பூர் கொள்ளையர்களை, 460 சிசிடிவி காட்சிகளை 400 கி.மீ.பயணம் செய்து சேகரித்து சிறு 3 இஞ்ச் ஸ்டிக்கர் தடயத்தை வைத்து 4 கொள்ளையர்களை பிடித்துள்ளனர் நெல்லை போலீஸார். இதுகுறித்த சுவாரஸ்ய கதையை பார்ப்போம். […]
பெட்ரோல் குண்டு வீசி, அரிவாளால் தாக்கி கவுன்சிலரை கடத்த முயன்ற அதிமுக…!!
பெட்ரோல் குண்டு வீசி, அரிவாளால் தாக்கி கவுன்சிலரை கடத்த முயன்ற அதிமுக…!! ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில் பதவிகளைக் கைப்பற்ற பெட்ரோல் வீசியும், அரிவாளால் தாக்கியும் வன்முறையில் இறங்கியுள்ளது அதிமுக.ராமநாதபுரம் மாவட்டம் ஊரக உள்ளாட்சி தேர்தலில் ராமநாதபுரம், திருப்புல்லாணி, மண்டபம், ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் திருவாடானை உள்ளிட்ட 5 ஊராட்சி ஒன்றியங்களில் முதற் கட்டமாகவும், கடலாடி, முதுகுளத்தூர், கமுதி, பரமக்குடி, போகலூர் மற்றும் நயினார் கோயில் உள்ளிட்ட 6 […]
என்.எல்.சி பாதுகாப்பு படை வீரரை தாக்கிய ரவுடி மணி கைது!
என்.எல்.சி பாதுகாப்பு படை வீரரை தாக்கிய ரவுடி மணி கைது! கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் வட்டம்- 15 என்.எல்.சி குடியிருப்பில் வசித்து வருபவர் செல்வேந்திரன் (30). இவர் என்.எல்.சி இரண்டாம் நிலக்கரி சுரங்கத்தில் மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வருகிறார்.இவர் ஓரிரு நாட்களுக்கு முன்பு மந்தாரக்குப்பம் ஓம் சக்தி நகர் பகுதியைச் சேர்ந்த பெங்களூர் மணி (எ) மணிகண்டன் என்.எல்.சி சுரங்க பகுதியில் அத்துமீறி நுழைந்து காப்பர் கம்பிகளை வெட்டி எடுத்துக்கொண்டு செல்லும் […]
ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நடத்திய மனித சங்கிலி செங்கல்பட்டு மாவட்டத்தில்
ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நடத்திய மனித சங்கிலி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் ஒன்றியத்தில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா நிறுவனத்தின் மூலம் குழந்தைகளுக்கு உரிமை மற்றும் பாதுகாப்புக்காக மனித சங்கிலி நடைபெற்றது. விவேகானந்தர் பிறந்த நாள் தேசிய இளைஞர் தினம் தினமாக கொண்டாடப்படுகிறது. இத்தினத்தை முன்னிட்டு ஓம் சக்தி பாராமெடிக்கல் பயிலும் 300 மேற்பட்ட மாணவர்களை கொண்டு குழந்தைகள் உரிமை மற்றும் பாதுகாப்பு சார்ந்த மனிதச் சங்கிலி மதுராந்தகம் அண்ணா பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. […]
`லாக்கரிலிருந்து எடுக்கப்பட்ட 400 சவரன் நகைகள்!’- பா.ஜ.க பிரமுகருக்கு
`லாக்கரிலிருந்து எடுக்கப்பட்ட 400 சவரன் நகைகள்!’- பா.ஜ.க பிரமுகருக்கு அதிர்ச்சிகொடுத்த கொள்ளைதிருவள்ளூர் மாவட்டத்தில் பா.ஜ.க பிரமுகர் வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட கொள்ளையர்கள், பூட்டை உடைத்து 400 சவரன் தங்க நகைகள் மற்றும் பணத்தைத் திருடிச் சென்றுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே உள்ள மேட்டுப்பாளையத்தில் பங்களா வீட்டில் குடியிருந்து வருபவர் ஆர்.எம்.ஆர்.ஜானகிராமன். இவர் பா.ஜ.க-வில் தேசிய பொதுக்குழு உறுப்பினராக உள்ளார். ஜானகிராமனின் தம்பி மகள் திருமணம் வரும் 20-ம் தேதி சென்னையில் நடக்கிறது.இதில் பங்கேற்க ஜானகிராமனின் […]
தம்பி, ஏடிஎம் கார்டைக் கொடுங்க; நான் பணம் எடுத்துத்தர்றேன்’- வாலிபரைப்
தம்பி, ஏடிஎம் கார்டைக் கொடுங்க; நான் பணம் எடுத்துத்தர்றேன்’- வாலிபரைப் பதறவைத்த டிப் டாப் முதியவர்பாலமுருகன் அவரது மாமனாரிடம், ‘இது உங்களுடைய கார்டுதானே… ஆனா இதுல வேற ஒருத்தரோட பெயர் இருக்குதே… எப்படி?’ என்று கேட்டிருக்கிறார். “தம்பி, உங்களுக்கு பணம் எடுக்கத் தெரியலையா… இங்க கொடுங்க. நான் எடுத்துத்தர்றேன்” என்று ஏடிஎம் கார்டை வாங்கி நூதன முறையில் ஒரு ஆட்டோ டிரைவரை ஏமாற்றியிருக்கிறார், ஒரு டிப்-டாப் முதியவர். முதியவர் இப்படியெல்லாம் யோசிப்பாரா என்று அதிர்ச்சியடைகிறார்கள் பெரம்பலூர் போலீஸார்.பெரம்பலூர் […]
சேலம்: சிவப்பு பாதரசம் பெயரில் பல கோடி ரூபாய் மோசடி செய்ய முயன்ற கும்பல் கைது!
சேலம்: சிவப்பு பாதரசம் பெயரில் பல கோடி ரூபாய் மோசடி செய்ய முயன்ற கும்பல் கைது! சேலத்தில் சிவப்பு பாதரசம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி செய்ய முயன்ற 5 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் மடக்கிப்பிடித்தனர்.சேலம் சூரமங்கலம் பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிவப்பு பாதரசம் (ரெட் மெர்குரி) என்ற கெமிக்கலை வாங்குவதற்காக ஒரு கும்பல் முகாமிட்டுள்ளதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அணு ஆயுதம் தயாரிப்பிலும், புற்று நோய்க்கான மருந்து தயாரிப்பிலும் […]