இயற்கை காவலன்
மதுரை மாவட்டம் திருமங்கலம் டவுன் காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராக பணி புரிபவர் திரு.சிவகுமார், இவர் மரங்களை வளர்ப்பதையும் அதனைப் பேணிக் காக்கவும் தனி ஆர்வம் கொண்டவர். அவர் வசித்து வரும் பகுதிகளில் உள்ள குளங்கள் மற்றும் சாலை ஓரங்களிலும் சுமார் 140 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வைத்து, கடந்த 2 வருடமாக தினமும் அதற்கு தண்ணீர் ஊற்றி, பராமரித்தும், மரகன்றுகளுக்கு தேவையான உரங்களை தனது சொந்த செலவில் வாங்கி பயன்படுத்தியும் வருகிறார். தனிநபராக மரங்களை பராமரித்து வரும் காவலரை ஊர் மக்களும், சமூக ஆர்வலர்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
