ரூ.20 லட்சம் கடன் தர்றோம்; ரூ.85,000 முன்பணம்! – நீலகிரியை அதிரவைத்த பொள்ளாச்சிப் பெண்ணின் மோசடி`வீடு கட்ட ரூ.20 லட்சம் கடன் வழங்குகிறோம். முன்பணமாக 85,000 ரூபாய் தாங்க’ என்று கூறி போலி ட்ரஸ்ட் மூலம் லட்சக்கணக்கில் மோசடி செய்த பொள்ளாச்சிப் பெண்ணை ஊட்டி போலீஸார் கைது செய்தனர். வீடு கட்ட கடன் தருகிறோம் அதற்கு முன்பணமாக ரூ.25 ஆயிரம் முதல் ரூ.85 ஆயிரம் வரை செலுத்துங்கள் எனப் பணத்தைப் பெற்றுக்கொண்டு தங்களை ஏமாற்றிவிட்டதாக நீலகிரி மாவட்டம் […]
Author: policeenews
திருப்பூர் மாநகர போலீஸ் எல்லை விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாக, போலீஸ் கமிஷனர் சஞ்சய் குமார் தெரிவித்தார்.
சிட்டி போலீஸ் விரிவாக்கம் திருப்பூர் மாநகர போலீஸ் எல்லை விரிவாக்கம் செய்யப்படவுள்ளதாக, போலீஸ் கமிஷனர் சஞ்சய் குமார் தெரிவித்தார். திருப்பூர் 15 வேலம்பாளையம் அமர்ஜோதி குடியிருப்பு பகுதியில் 38 ‘சிசிடிவி’ கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் துவக்க விழா நேற்று நடந்தது. போலீஸ் கமிஷனர் சஞ்சய் குமார் ‘சிசிடிவி ‘ கேமராக்களை இயக்கி வைத்தார். அதன் பின், அவர் பேசியதாவது, கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பல்வேறு திருட்டு, கொள்ளை சம்பவங்கள் மற்றும் எளிதில் குற்றங்கள் தடுக்க கண்டுபிடிக்க முடிகிறது. […]
உயிர்நீத்த தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் – கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்திய கிராம மக்கள்
மதுரை மாவட்டம் சோளம்பட்டி கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் திரு.பாலமுருகன் என்பவர் அருணாச்சலப்பிரதேசம் கிட்டியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது மழையின் காரணமாக வாகனம் கவிழ்ந்து உயிர்நீத்தார். அவரது உடல் 12.12.2019-ம் தேதியன்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு காவல்துறை துணைத் தலைவர் திருமதி.ஆனி விஜயா இ.கா.ப அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மணிவண்ணன் அவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.வினய் இ.ஆ.ப அவர்கள் ஆகியோர் மலர்வளையம் வைத்து 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. […]
இயற்கையின் நாயகனாக மக்களால் பாராட்டப்படும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. செல்வநாகரத்தினம். இ.கா.ப அவர்கள் தலைமையில்¸ “மரக்கன்றுகளை நட்டு, இயற்கையை பாதுகாப்போம்” என்ற உறுதிமொழி எடுத்துக்கொண்டு 2 மாதத்தில் சுமார் 1¸500 மரக்கன்றுகளை காவல்துறை சார்பில் நடப்பட்டுள்ளது. ச.அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர்.
உயர் நீதிமன்ற மதுரை கிளையில் புதிய காவல் நிலையம் திறப்பு .
நேற்று (17.12.2019) சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வளாகத்தில் புதிய காவல் நிலையத்தை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மாண்புமிகு. ஏ.பி.சாஹி அவர்கள் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் வரவேற்புரை வழங்கினார். மேலும் இக்காவல் நிலையத்திற்கு காவல் உதவி ஆணையராக திருமதி.மல்லிகா அவர்களும் காவல் ஆய்வாளர்களாக திருமதி.திலகவதி, திருமதி. கவிதா அவர்களும், காவல் உதவி ஆய்வாளர்களாக திரு. காந்தி, திரு. ஞானசேகரன், திரு. காளிமுத்து மற்றும் […]
லயோலா கல்லூரி மாணவிகளுக்கு, இன்று (17.12.2019) காவலன் SOS செயலி குறித்து சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் விழிப்புணர்வு வழங்கினார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள், பெண்கள் கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களுக்கு நேரில் சென்று பெண்களின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட காவலன் SOS செல்போன் செயலி குறித்தும், அது செயல்படும் விதம் குறித்தும், இச்செயலியின் பயன்பாடு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இதன் பயனாக பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் காவலன் SOS செயலியை தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து, தங்கள் பாதுகாப்பை உறுதி செய்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் […]
வேளாண்மை கூட்டுறவு வங்கியில் மோசடி… உதவி செயலாளர் கைது!
வேளாண்மை கூட்டுறவு வங்கியில் மோசடி… உதவி செயலாளர் கைது!நெல்லை, டிச.17- ஆலங்குளம் நல்லூர் வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வைப்பு நிதி ரூ.1 கோடியை மோசடி செய்த உதவி செயலாளர் கைது செய்யப்பட்டார்.தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்தவர் சொர்ணராஜ். இவர் ஆலங்குளம் நல்லூரில் உள்ள வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உதவி செயலாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2016- 2018 வரை உள்ள காலகட்டத்தில் வாடிக்கையாளர்கள் வங்கியில் செலுத்திய வைப்பு நிதியில் போலியாக ஆவணங்கள் தயாரித்து வாடிக்கையாளர்கள் பெயரில் […]
kavalan sos app எப்படி உபயோகிக்க வேண்டும்;
Kavalan app எப்படி உபயோகிக்க வேண்டும் என்று பொது மக்களுக்கு காவல்துறையினர் பொதுமக்களுக்கு கற்று கொடுத்தனர் சென்னை
இந்த நிலையில், கடந்த 7-ம் தேதி ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், சப்-கலெக்டர் சுகபுத்ரா ஆகியோர் மன்னார் வளைகுடாவில் உள்ள மனோலி தீவில் சோதனை
இந்த நிலையில், கடந்த 7-ம் தேதி ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், சப்-கலெக்டர் சுகபுத்ரா ஆகியோர் மன்னார் வளைகுடாவில் உள்ள மனோலி தீவில் சோதனை மேற்கொண்டனர். இந்தச் சோதனையின்போது அந்தத் தீவை கடத்தல்காரர்கள் பயன்படுத்துவது தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒருவர் இலங்கை தலைமன்னார் கடற்பகுதியில் சுமார் 6.5 கிலோ தங்கத்தை வைத்திருப்பதாகவும் அதை வாங்கிவந்து தந்தால் குறிப்பிட்ட தொகை தருவதாகவும் சுந்திரமுடையான் பகுதியைச் சேர்ந்த வேலுசாமி, புலிப்படை கணேசன் ஆகிய இருவரிடமும் […]
போலி மதுபானங்கள் தயாரித்து விற்பனை செய்த இருவர் கைது!
போலி மதுபானங்கள் தயாரித்து விற்பனை செய்த இருவர் கைது! இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு காவல்நிலையத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டர் மணிவேல், எஸ்.ஐ.ஜெகன் தலைமையிலான போலீசார், ஆற்காடு, காவனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் போலி மதுபானங்கள் தயாரித்து விற்பனை செய்து வந்த ஆற்காடு நகரம் பாலசுந்தரம் தெருவை சேர்ந்த அமுலு (எ) செல்வம், திமிரி காவனூர் கிராமத்தை சேர்ந்த கௌரி ஓட்டல் உரிமையாளர் கணபதி ஆகிய இருவரை டிசம்பர் 16ந்தேதி கைது செய்தனர்.போலி மதுபானங்கள் தயாரிப்பதற்கு மூளையாக செயல்பட்டதாக, அதன் […]