தூத்துக்குடி போலீஸ் வேனில் டிக் டாக் செய்த இளைஞர்கள் நூதன தண்டனை வழங்கிய தூத்துக்குடி தென்பாகம் போலீஸ்.
ஒர்க்ஷாப்பில் வேலைக்காக நின்றுகொண்டிருந்த போலீஸ் வாகனத்தின் முன் டிக்டாக் செய்தவர்கள் மூன்று பேரை தென்பாகம் போலீசார் பிடித்து நூதன தண்டனை கொடுத்தது இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தூத்துக்குடி லெவிஞ்சிபும் இரண்டாவது தெருவில் வசிக்கும் சீனு (17), த/பெ. ராமர், கோகுலகிருஷ்ணன், (17),
த/பெ. ஆனந்தன், மற்றும் முனியசாமிபுரத்தை சேர்ந்த செகுவாரா 21), த/பெ. பலவேசம் இவர்கள் மூவரும்
ஒர்க்ஷாப்பில் வேலைக்காக நின்றுகொண்டிருந்த போலீஸ் வாகனத்தின் முன் டிக்டாக் செய்து வீடியோ வெளியிட்டுள்ளனர், இது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியதையடுத்து மூன்று பேரையும் பிடித்த தென்பாகம் போலீசார் அவர்களை விசாரணை செய்ததில், அவர்கள் செய்த தவறை உணர்ந்து, இனிமேல் இதுபோன்ற எந்த தவறும் செய்ய மாட்டோம் என மன்னிப்பு கேட்டுள்ளனர்.
சிறு வயது இளைஞர்களாக இருப்பதாலும் , அவர்கள் விளையாட்டாக செய்த தவறை ஒத்துக் கொண்டதாலும், அவர்களுக்கு நூதன முறையில் இன்று ஒரு நாள் காலை முதல் மாலை வரை தூத்துக்குடி காய்கறி மார்க்கெட் முன்பு போக்குவரத்தை ஒழுங்கு படுத்த வேண்டும் என தண்டனை தரப்பட்டது, .
மாநகர காவல் துனை கண்காணிப்பாளர் பிரகாஷ் காவல் துறையின் பணி எவ்வளவு சிரமமானது என இவர்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்க்காக இந்த நூதன தண்டனையை வழங்க உத்தரவிட்டார்,போக்குவரத்து உதவி ஆய்வாளர் வெங்கடேஷ் மற்றும் சிவகுமார் இவர்களுக்கு பயிற்ச்சி அளித்தனர்.
விளையாட்டாக இளைஞர்கள் செய்த தவறுக்கு கடுமையான தண்டனை வழங்கி அவர்களின் வாழ்க்கை சிதைக்காமல் அவர்களை பொது மக்களுக்கு சேவை செய்யும் பொறுப்புள்ள மக்களாக மாற்ற காவல் துறை எடுத்துள்ள இந்த முயற்சி பொதுமக்களிடையே பெரும் பாராட்டையும் வரவேற்பபையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.