`வேலைக்குச் சென்ற பெண்; சோளக்காட்டில் சடலமாக மீட்பு!’ – அருப்புக்கோட்டை அதிர்ச்சிஇன்று காலையில், மக்காச்சோளக்காட்டில் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சத்தியபாமாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பரளச்சியில் சோளக்காட்டில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.பரளச்சி ராணிசேதுபுரத்தைச் சேர்ந்தவர் கனகராஜின் மனைவி சத்தியபாமா. தினமும் காலை தனக்குச் சொந்தமான விவசாய காட்டிற்குச் சென்று விவசாய வேலைகளைக் கவனித்துவிட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம்.நேற்று, விவசாயக் […]
Author: policeenews
விழுப்புரம்: ஆன்லைன் லாட்டரி தொடர்பாக விழுப்புரம் மாவட்டத்தில் 280 வழக்குகள் பதிவு
விழுப்புரம்: ஆன்லைன் லாட்டரி தொடர்பாக விழுப்புரம் மாவட்டத்தில் 280 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அம்மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஆன்லைன் லாட்டரிக்கு எதிராக தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆன்லைன் லாட்டரியில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்லைன் லாட்டரி விற்பனைக்கு துணைபோகும் காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்
திரும்பி வந்து சொல்கிறோம்’- திருச்சியை தொடர்ந்து சேலத்தைப் பதறவைத்த நகைக் கொள்ளை!
திரும்பி வந்து சொல்கிறோம்’- திருச்சியை தொடர்ந்து சேலத்தைப் பதறவைத்த நகைக் கொள்ளை!திருச்சி லலிதா ஜூவல்லர்ஸ் கடையில் உள்ள நகைகளைத் திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றதுபோல சேலம் திவ்யம் நகைக்கடை உரிமையாளர் வீட்டில் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் குரங்குசாவடி பகுதியைச் சேர்ந்தவர் பிரபல நகைக்கடை உரிமையாளர் சீனிவாசன். இவருக்குச் சொந்தமாக சேலம் மாநகரில் மூன்று நகைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சேலம் டு ஓமலூர் மெயின் ரோட்டில் குரங்குசாவடி பகுதியில் திவ்யம் […]
8 மூட்டைகளில் ரூ.7 லட்சம்; 5 மூட்டைகளில் ரூ.20 லட்சம்’ – சென்னையில் நடுரோட்டில் சிக்கிய இளைஞர்
8 மூட்டைகளில் ரூ.7 லட்சம்; 5 மூட்டைகளில் ரூ.20 லட்சம்’ – சென்னையில் நடுரோட்டில் சிக்கிய இளைஞர்சென்னையில் நடுரோட்டில் 13 மூட்டைகளுடன் காத்திருந்த ஐயப்பன் என்பவரிடம் போலீஸார் விசாரித்தனர். மூட்டைகளில் லட்சக்கணக்கில் ரூபாய் நோட்டுகளும் சில்லறைகளும் இருந்தது தெரிந்ததும் போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். சென்னை கே.கே.நகர் பகுதியில் 13 மூட்டைகளுடன் இளைஞர் ஒருவர் காத்திருந்தார். அப்போது அவ்வழியாகச் சென்ற போலீஸார்,அந்த இளைஞரிடம் மூட்டைகளில் என்ன இருக்கிறது. அதை ஏன் நடுரோட்டில் வைத்திருக்கிறாய்?’ என்று கேட்டுள்ளனர். அதற்கு அந்த இளைஞர், […]
சென்னை பிராட்வேயில் உள்ள தங்கும் விடுதியில் 15 கிலோ கஞ்சா வைத்திருந்த 6 பேர் கைது
சென்னை பிராட்வேயில் உள்ள தங்கும் விடுதியில் 15 கிலோ கஞ்சா வைத்திருந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அசாம் மற்றும் திரிபுராவைச் சேர்ந்த அன்வர் பாஷா, சிக்கந்தர் பாஷா, ரூபிக் இஸ்லாம், ரபீக், குர்ஷித் உள்பட 6 பேரை கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தலைமைறைவான மேலும் 3 பேரை பிடிக்க எஸ்பிபிளனேடு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்
உங்க அப்பாவுக்கு அடிபட்டுருச்சு!’ – வேலூரில் உறவினருடன் நம்பிச் சென்ற மாணவிக்கு நடந்த கொடுமை6-ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட இளைஞரை
உங்க அப்பாவுக்கு அடிபட்டுருச்சு!’ – வேலூரில் உறவினருடன் நம்பிச் சென்ற மாணவிக்கு நடந்த கொடுமை6-ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட இளைஞரைக் கிராம மக்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர். வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதியை அடுத்த கீழ்பட்டி சாந்தி நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவரின் 11 வயது மகள் அங்குள்ள நடுநிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்துவருகிறார். கடந்த 12-ம் தேதி காலை வழக்கம்போல் அந்தப் மாணவி பள்ளிக்குச் சென்றார்.மாலை 3.30 மணியளவில் மாணவியின் குடும்ப […]
ரயில்வே காலிப் பணியிடங்களில் சேர தமிழக இளைஞர்கள் தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும்: டிஜிபி சைலேந்திர பாபு வலியுறுத்தல்
ரயில்வே காலிப் பணியிடங்களைத் தமிழக இளைஞர்கள் பயன் படுத்திக் கொள்ளவில்லை என ரயில்வே டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்தார். செங்கல்பட்டு, ராஜேஸ்வரி வேதாசலம் அரசினர் கலைக் கல்லூரியில் ரயில்வே பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி, கல்லூரி முதல்வர் சிதம்பர விநாயகம் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக ரயில்வே டிஐிபி சி.சைலேந்திர பாபு, ரயில்வே ஐஜி வி.வனிதா ஆகியோர் பங்கேற்று ரயில்வே பாதுகாப்பு தொடர்பாக மாணவ, மாணவியருடன் கலந் துரையாடினர். நிகழ்ச்சியில் டிஜிபி சைலேந்திர பாபு […]
தாம்பரம் அருகே வழிப்பறி செய்த 3 பேர் கைது
சேலத்தில் இருந்து சென்னைக்கு லாரிஒன்றை உதய்சங்கர் என்பவர் ஓட்டிவந்துள்ளார். சிங்கப்பெருமாள் கோவில் அருகே வந்தபோது லாரி பழுதாகி நின்றது. அப்போது அங்கு காரில் வந்த 3 பேர், தங்களை செய்தியாளர்கள் எனக்கூறி, ‘நீங்கள் டயர் திருடி விற்பதாகபுகார் வந்துள்ளது’ என கூறிபுகைப்படம் எடுத்துள்ளனர். இந்த செய்தியை பத்திரிகையில் பிரசுரிக்காமல் இருக்க பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். உதய்சங்கர் பணம் தர மறுத்துள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குடிபோதையில் இருந்த மூவரும் லாரி ஓட்டுநர் உதய்சங்கரை […]
ஒருதலைக் காதல் டார்ச்சர்! மாணவி தீக்குளித்து தற்கொலை! கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த குறுக்கத்தன்சேரி கிராமத்தை சேர்ந்தவர்கள் வீரமணி – செண்பகவள்ளி தம்பதியினர்.
ஒருதலைக் காதல் டார்ச்சர்! மாணவி தீக்குளித்து தற்கொலை! கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த குறுக்கத்தன்சேரி கிராமத்தை சேர்ந்தவர்கள் வீரமணி – செண்பகவள்ளி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் மற்றும் இரண்டு ஆண்பிள்ளைகள் உள்ளனர். இப்பெண்கள் இருவரும் திட்டக்குடி அரசு கலைக் கல்லூரியில் இளங்கலை படிப்பு படித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களின் இரண்டாவது பெண்ணான திவ்யதர்ஷினி கல்லூரியில் படித்து வரும் நிலையில், அதே கிராமத்தை சேர்ந்த மணிமாறன் என்பவர் தொடர்ச்சியாக திவ்யதர்ஷினியை பின் தொடர்ந்து, காதலிக்குமாறு வற்புறுத்தி […]
சிலை திருட்டு புகாரில் ஶ்ரீரங்கம் கோவில் முக்கிய பட்டர்கள் மீது வழக்கு பதிவு!
சிலை திருட்டு புகாரில் ஶ்ரீரங்கம் கோவில் முக்கிய பட்டர்கள் மீது வழக்கு பதிவு! தமிழக சிலைகடத்தல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நீதிமன்றம் மூலம் நியமிக்கப்பட்ட பொன்மாணிக்கவேல் பதவி நீட்டிப்பு கொடுக்காத நிலையில் புதிய அதிகாரி நியமிக்கப்பட்ட நிலையில் முதல்முறையாக இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது ஶ்ரீரங்கம் பகுதியில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சொந்தமான சிலைகள் மற்றும் விலைமதிப்புள்ள கலைப்பொருட்கள் கடந்த 2012 முதல் 2014 ஆம் ஆண்டு வரையான […]