சென்னை எம்.கே.பி. நகர் அருகே சாலையில் இருந்த பள்ளத்தால், இருசக்கர வாகனத்தில் சென்ற தலைமைக் காவலர் தவறி விழுந்தார். பின்னால் வேகமாக வந்த குப்பை லாரி அவர் மீது ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே தலைமைக் காவலர் உயிரிழந்தார். சென்னை மகாகவி பாரதியார் நகர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகவும், நுண்ணறிவுப் பிரிவிலும் பணியாற்றி வந்தவர் பழனிகுமார் (45). மதுரை மாவட்டம், மேலவளவு பகுதியைச் சேர்ந்த இவர் சென்னை பரங்கிமலை காவலர் குடியிருப்புப் பகுதியில் வசித்து வந்தார். […]
Author: policeenews
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த திரு. தெ.கண்ணன் அவர்கள், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாள் : 18 11 2019 இடம் : காஞ்சிபுரம் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த திரு. தெ.கண்ணன் அவர்கள், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று காலை காஞ்சிபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் திரு. தெ.கண்ணன் அவர்கள் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை காஞ்சிபுரம் மாவட்ட தனிப் பிரிவு ஆய்வாளர் திரு.திருவள்ளுவர் அவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். செங்கல்பட்டில் மாவட்ட காவல் அலுவலக இடம் தேர்வு செய்யப்படும் வரை […]
CCTV கண்காணிப்பு கேமராக்கள் மூலம் குற்றவாளிகளின் நடவடிக்கைகள் கண்காணிப்பு
மதுரை மாநகரில் குற்றம் நடைபெறாமல் முன்கூட்டியே தடுப்பதற்காகவும் அந்நிய சந்தேக நபர்களை எளிதில் அடையாளம் காண்பதற்காகவும் குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காகவும் நேற்று (20.11.2019) ஜெய்ஹிந்துபுரம் வீரகாளியம்மன் கோவில் தெருவில் 22 CCTV கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் நிகழ்ச்சியை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS அவர்கள் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். ஜெய்ஹிந்துபுரம் குடியிருப்போர் நலச் சங்கத்தினர் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து 22 CCTV கண்காணிப்பு கேமராக்களை பொருத்தம் செய்ய அனைத்து […]
கொருக்குப்பேட்டை ரயில்வே காவலர்கள் இரும்பு பாதையில் சோதனை நடத்தினர்
கொருக்குப்பேட்டை ரயில்வே காவல் ஆய்வாளர் திருமதி. சசிகலா அவர்களின் அறிவுறுத்தலின் பெயரால் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு பரந்தாமன் அவர்களுடைய தலைமையில் எல்லையில் பென்சில் பேக்டரி முதல் விம்கோ நகர் ரயில் நிலையம் வரை ரயில் தண்டவாளங்களில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் SI ராஜாமணி காவலர்கள் 559 பிரசாத் மற்றும் காவலர் 476 சத்யராஜ் இவர்கள் இன்று21 .11. 19ஆம் தேதி ரோந்து பணியில் உள்ளார்கள் என்பதை போலீஸ் இ நியூஸ் திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் M. […]
தேசிய ஒருமைப்பாட்டு தினத்தை முன்னிட்டு சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் ஆணையாளர் அவர்கள் முன்னிலையில் உறுதிமொழி ஏற்பு.
தேசிய ஒருமைப்பாட்டு தினத்தை முன்னிட்டு தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழியை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் காவல் ஆணையரகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை பெருநகர காவல் அதிகாரிகள் முதல் காவல் ஆளிநர்கள் வரை பலர் கலந்துக்கொண்டனர். உறுதிமொழி “நாட்டின் சுதந்திரம், ஒருமைப்பாடு ஆகியவற்றைக் தாக்கவும், வலுப்படுத்தவும், என்னை அர்ப்பணித்துச் செயல்படுவேன் என்று மனமார உறுதி கூறுகிறேன்”. “நான் ஒருபோதும் வன்முறையில் ஈடுபடமாட்டேன் என்றும், மதம், மொழி, வட்டாரம் மற்றும் […]
விருதுநகர் மாவட்ட செய்திகள்
*விருதுநகர் மாவட்ட செய்திகள்:- காவலர் இரங்கல் செய்தி:- அருப்புக்கோட்டை சப்டிவிசனுக்குட்பட்ட திருச்சுழி அருகே எம்.ரெட்டியாபட்டி காவல் நிலையத்தில் தனிப்பிரிவு ஏட்டையாவாக பணிபுரிந்து வந்த சாம்பிரேம்ஆனந்த் முத்துராமலிங்கபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி அருகே இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது,அத்துடன் தலைக்கவசம் அணிந்து சென்று கொண்டிருந்தநிலையில் யாரும் எதிர்பாராதவிதமாக நாய் குறுக்கே வந்ததில் நிலைதடுமாறி எதிரே இருந்த பேரிக்கார்டு மீது மோதி கீழே விழுந்து பலத்த காயங்களுடன் கல்லூரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார் இதனால் காவல் […]
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரிந்த காரின் தீயை அணைத்த காவலரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
சென்னை, சூளையைச் சேர்ந்த ரஞ்சித், வ/42 என்பவர் அவரது மனைவி மற்றும் தங்கையுடன் TN 04 AM 4609 என்ற பதிவெண் கொண்ட Hyndai Grand I 10 காரில் நேற்று 18.11.2019 இரவு சுமார் 07.40 மணியளவில் F2 எழும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, காரின் இடது பக்க முகப்பில் தீப்பற்றி எரிவதை கண்ட கார் ஓட்டுநர் மூல்சிங் காரை நடு ரோட்டில் நிறுத்தி அனைவரையும் இறங்கிவிட்டு தீயை அணைக்க […]
சமூக வலைதளங்களில் முன்பின் தெரியாதவர்களிடம் தகவல் பரிமாற கூடாது: மாணவ, மாணவியருக்கு காவல் ஆணையர் அறிவுரை
சமூக வலைதளங்களில், தெரியாதவர்களிடம் உரையாடுவதோ, தகவல் பரிமாற்றம் செய்வதோ கூடாது என பள்ளி மாணவ, மாணவியருக்கு சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவுரை வழங்கியுள்ளார். குழந்தைகள் மீதான வன்முறை தடுப்பு தினத்தை முன்னிட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவின் சார்பில் எழும்பூரில் உள்ள மாநில அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் இதில்சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு போக்சோ சட்டம் தொடர்பான விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை […]
பர்கூர் மகளிர் காவல் நிலையத்தில் பெண் போலீஸாரை தாக்கிய மாணவர் கைது
பர்கூர் மகளிர் காவல் நிலையத்தில் 3 பெண் காவலர்களைத் தாக்கிய கல்லூரி மாணவரை போலீஸார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஒரப்பம் பகுதியைச் சேர்ந்த ஜான் என்பவரது மகள் சத்யா(19). இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெருமாள் என்பவருடன் திருமணம் நடந்தது. இந்நிலையில் தொகரப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பிரதாப்(21) என்பவருடன் நட்பு ஏற்பட்டு அவரை திருமணம் செய்துள்ளார். இதையடுத்து நேற்று முன்தினம் பர்கூர் காவல் நிலையத்தில், சத்யா மற்றும் பிரதாப் ஆகியோர் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். […]
காவல்துறையின் பெருமையை உணர்த்தும் காவலர் அருங்காட்சியகம்
கோவை ஸ்டேட் பேங்க்சாலையில் ரயில் நிலையம் எதிரே, சிவப்பு, வெள்ளை வர்ண கட்டிடத்தில், காவல்துறைக்கே உரிய கம்பீரத்துடன் காட்சியளிக்கிறது ‘காவலர் அருங்காட்சியகம்’. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தை, புனரமைப்பு செய்து, காவல்துறையின் பெருமையை விளக்கும் வகையில், மாநகர காவல் துறை நிர்வாகத்தால் இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது. 1918-ம் ஆண்டு எப்.ஏ.ஹாமில்டன் என்ற ஆங்கிலேய காவல்துறை அதிகாரியால் 3,488 சதுரடி பரப்பில் மேற்கண்ட இடத்தில் ஹாமில்டன் கிளப் கட்டிடம் கட்டப்பட்டது. நூறாண்டை கடந்த இக்கட்டிடத்தில் மொத்தம் 16 […]