மதுரை, செல்லூர் பகுதியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறிய, மற்றும் காவல் துறையியினரை பணி செய்ய விடாமல் தடுத்த கறிக் கடைகாரர் கைது
மதுரை மாநகர், செல்லூர் D2, காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு. கனேசன் அவர்கள் மற்றும் தலைமை காவலர்கள் சலீம் சேட்,மகேந்திரன், மற்றும் கார்த்திக், பாண்டி ஆகியோர்களுடன் நேற்று ஞாயிற்று (25/04/21) கிழமை முழு ஊரடங்கு கண்காணிப்பு பணியில் காலை 7.30 மணியளவில் ரோந்து சென்ற போது மதுரை 60 அடி ரோடு, மற்றும் அய்யனார் கோவில் 5 வது தெரு சந்திப்பில், ஊரடங்கு விதியை மீறி, நோய் தொற்று ஏற்படும் வகையில் சமூக இடைவெளியை கடைபிக்காமல் அனுமதியின்றி கறிக்கடையை திறந்து கறி வியாபாரம் செய்து வந்த மதுரை, செல்லூர் அய்யனார் கோவில் 5 வது தெருவை சேர்ந்த மகாலிங்கம் மகன் கார்த்தி்க் வயது 30/21, மதுரை, திருப்பாலை, அய்யர் பங்களாவை சேர்ந்த பழனி மகன் ரஞ்சித்குமார் வயது 26/21, மதுரை செல்லூர் அய்யனார் கோவில் 5 வது தெருவை சேர்ந்த ரேணுகாதேவி வயது 48/21, ஆகியோரிடம் ஏன் ஊரடங்கு சமயத்தில் விதிமுறைகளை மீறி கறிக்கடை நடத்தி மக்களுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்படும்படி நடந்து கொள்ளுகிறீகள் என கேட்டதற்கு, அவர்கள் எங்களை கட்டுப்படுத்த நீங்கள் யாருடா என கூறி தகாத வார்த்தையால் காவலர்களை திட்டி அவர்களை தங்களின் பணியை செய்ய விடாமல் தடுத்தனர் மேலும் முகக்கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் மக்களுக்கு கொரோனா நோய் தொற்றும் ஏற்படும் வகையிலும் அவர்கள் நடந்து கொண்டது மட்டுமல்லாமல் காவலர்கள் அவர்கள் பணியை செய்ய விடாமல் தடுத்து அவர்களை மிகவும் தர குறைவான வார்த்தைகளால் திட்டினர் இதனால் சம்பந்தப்பட்ட நபர் கார்த்திக் மீது நடவடிக்கை எடுத்து அவரை கைது செய்தனர், மற்ற இருவரும் ஓடி தலைமறைவாயினர் அவர்களை தேடி வருகின்றனர் சார்பு ஆய்வாளர் திரு. கனேசன் அவர்கள் கார்த்திக் மீது வழக்கு பதிவு செய்து ஆய்வாளர் திரு அழகர் அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றார்