Police Department News

மதுரை, தத்தனேரி பகுதியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை, செல்லூர் போலீசார் விசாரணை

மதுரை, தத்தனேரி பகுதியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை, செல்லூர் போலீசார் விசாரணை

மதுரை மாநகர் செல்லூர் D2,காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான தத்தனேரி KV சாலை, மருதுபாண்டியர் தெருவில் வசிக்கும் ராஜகோபால் மகன் முருகன் வயது 56/21, இவர் தன் மனைவி வசந்தி, மகள் கவிதா, மகன் உன்னிகிருஷ்ணன் ஆகியோருடன் வசித்து வருகிறார் இவர் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இவரின் மகன் மதுரை செயின்ட் பிரிட்டோ பள்ளியில் 12 ம் வகுப்பு வரை படித்துள்ளார், தற்போது சென்னை வளசரவாக்கத்தில் டிவி சீரியல் கம்பெனியில் ஹெல்பராக வேலை செய்து வந்தார் தற்போது கொரோனா காலமாதலால், சரியாக வேலை இல்லாமல், புலம்பிக் கொண்டிருந்தார், இவருக்கு தினசரி சம்பளம் 200 என்பதால் அதை வைத்து சென்னையில் வாழ முடியாத காரணத்தால் சென்னையிலிருந்து மதுரைக்கு இவரின் தந்தையிடத்திற்கு வந்து வாழ்ந்து வந்தார் இதற்கிடையில் இவரின் அக்காள் கவிதாவிற்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன, தனக்கு ஏற்கனவே போதிய வருமானம் இல்லாததாலும் அக்காளின் திருமணச் செலவை நினைத்து கடந்த 10 நாட்களாக கவலை பட்டுக் கொண்டிருந்த நிலையில் கடந்த 21 ம் தேதி காலை வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, வீட்டில் தனக்குத் தானே தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார், இதனை கண்ட அவரின் அக்காள் சத்தம் போட அக்கம் பக்கத்தினர் வந்து அவரை தூக்கிலிருந்து இறக்கி அவரை காப்பாற்றும் நோக்கில் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர் உடனே அவரது தந்தை முருகன் அவர்கள் செல்லூர் D2, காவல்நிலையத்தில் புகாரளித்து தனது மகனின் இறப்பு சம்பந்தமாக சட்டப்படி விசாரணை செய்யும்படி கூறியுள்ளார், புகாரை பெற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர் திரு. அழகர் அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திருமதி. லெக்ஷிமி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published.