Police Department News

மதுரை, செல்லூரில் கொரோனா ஊரடங்கால் வருமானமிழந்த லோடு மேன் தூக்கு போட்டு தற்கொலை

மதுரை, செல்லூரில் கொரோனா ஊரடங்கால் வருமானமிழந்த லோடு மேன் தூக்கு போட்டு தற்கொலை

மதுரை மாநகர், செல்லூர் D2, காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான மதுரை மனவாளன் நகர் பஞ்சுநாதன் முத்துப்பிள்ளை காம்பவுண்ட்டில் குடியிருக்கும் அழகர்சாமி மகன் அருள்மணிகன்டன், வயது 36/21, இவரின் தந்தை அழகர்சாமி அவர்கள் தன் மனையுடன் மதுரை குலமங்கலம் மெயின் ரோட்டில் திருப்பதி காம்பவுண்டில் வசித்து வந்தார். அப்பா அழகர்சாமி பறவை காய்கறி மார்கெட்டில் செந்தில்குமார் என்பவரது கடையில் லோடு மேனாக வேலை பார்த்து வந்தார், தற்போது லாக்டவுன் மற்றும் தன் வயது காரணமாக கடந்த ஒரு வார காலமாக கடையில் வேலை இல்லை என்றும் பணப் பிரச்சனை உள்ளதாகவும் கூறிக் கொண்டே இருந்துள்ளார். இந்த நிலையில் இவர் கடந்த 6 ம் தேதி மாட்டுத்தாவணி மார்கெட்டுக்கு வேலை தேடி சென்றவர் மதியம் ஒரு மணியளவில் தன் மகன் வீட்டிற்கு வந்து விட்டு பிறகு தன் வீட்டிற்கு சென்றவர் தன் மனையிடம் போனில் குடும்பத்தை பார்த்து கொள் என்று சோகமாக கூறியுள்ளார் இதனால் சந்தேகமடைந்த அவரது மகன், மருமகள் ஆகியோர் அழகர்சாமி குடியிருக்கும் குலமங்கலம் மெயின் ரோட்டில் உள்ள வீட்டிற்கு சென்று பார்த்தபோது அங்கு அவர் தன் வீட்டு ஹாலில் சீலிங் பேன் மாட்டும் கொண்டியில் பிளாஸ்டிக் கயறால் தனக்குத் தானே தூக்கிட்டு தொங்கிக் கொண்டிருந்தார் உடனே இவர்கள் சத்தம் போட்டதை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர் பின்னர் கயற்றை கழட்டி பார்த்த போது அவர் இறந்த நிலையில் இருந்தார், உடனே அவரது மகன் செல்லூர் D2, காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்து, தனது தந்தையின் இறப்பு சம்பந்தமாக சட்டப்படி விசாரணை செய்து தங்களின் குலவழக்கப்படி நல்லடக்கம் செய்ய உதவும்படி புகார் மனு அளித்தனர். புகாரை பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர் திரு. அழகர் அவர்கள் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திருமதி. லெக்ஷிமி அவர்கள் வழக்கு பதிவு செய்து முறைப்படி விசாரணை நடத்தினர் வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.