தீயணைப்பு அருங்காட்சியகத்தை துவக்கிவைத்து குழந்தைகளுடன் கண்டு களித்த காவல்துறை இயக்குநர்.
தமிழகத்தில் முதன்முறையாக குழந்தைகளுக்கென தீயணைப்பு அருங்காட்சியகம் கோயம்பத்தூர் இணை இயக்குனர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பழங்காலத்தில் பயன்படுத்திய தீயணைப்பு கருவிகள், உபகரணங்கள், வீரர்களின் அறைகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பயன்படுத்திய ஆடைகள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் காவல்துறை இயக்குநர் முனைவர் திரு.C.சைலேந்திரபாபு இ.கா.ப அவர்கள் கலந்துகொண்டு அருங்காட்சியகத்தை திறந்து வைத்து குழந்தைகளுடன் கண்டு களித்தார்கள். மேலும் அருங்காட்சியகத்தை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம், குழந்தைகள் ஆர்வத்தை தூண்டும் வகையில் வைக்கப்பட்டுள்ளதால் இதற்கு குழந்தைகளின் காட்சியகம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.