பெண் காவல் ஆய்வாளருடன் தி.மு.க., பிரமுகர் வாக்குவாதம்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொங்கலூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, பொங்கலூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க.வை சேர்ந்த ரவி என்பவர் வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர், அப்போது அவிநாசிபாளையம் காவல் ஆய்வாளர் கோமதியிடம் ரவி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நான்தான் அடுத்த ஒன்றிய செயலாளர் வேண்டுமானால் வழக்கு பதிவு செய்து கொள்ளுங்கள் நான் பார்த்து கொள்கிறேன், என்றார், அவரும் அவருடன் வந்தவர்களும் முககவசம் அணியவில்லை, சமூக இடைவெளியே பின்பற்றவில்லை. உடன் வந்தவர்கள் சமாதானம் செய்ததன் பேரில் கலைந்து சென்றனர். காவலர்களை அவர்களது பணியை செய்ய விடலாமே!