மதுரை அலங்காநல்லூர், அருகே மேட்டுப்பட்டியில் பீடி தர மறுத்த கடைக்காரரை வெட்டிய வாலிபர் கைது
மதுரை அலங்காநல்லூர் சக்கரை ஆலை அருகே உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் புவனேஸ்வரன் வயது 34, இவர் அந்த பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். தற்போது ஊரடங்கு காலம் என்பதால் அரசு அனுமதித்துள்ள நேரத்தை தவிர மற்ற நேரங்களில் கடையை திறப்பதில்லை. இந்நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த ராம்குமார் வயது 28, என்பவர் கடையை திறந்து தனக்கு பீடி கொடுக்குமாறு தகராறு செய்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்ததால் கத்தியை எடுத்து புவனேஸ்வரனை சரமாரி வெட்டினார். இதில் இரண்டு கைகளிலும் பலத்த காயமடைந்த புவனேஸ்வரன் மதுரை அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அலங்காநல்லூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. நடேசன் அவர்கள் வழக்கு பதிவு செய்து ராம்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தார்.