Police Recruitment

மக்கள் அச்சம் இன்றி வாக்களிக்க போலீசாரின் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

மக்கள் அச்சம் இன்றி வாக்களிக்க போலீசாரின் பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

தேனி மாவட்ட, காவல்துறையினரால் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும். 100% வாக்களிக்கும் படியும், பொது மக்களுக்கான காவல்துறை பாதுகாப்பினை உறுதி செய்திடும் விதத்திலும் காவல்துறையினரும், துணை ராணுவ படையினரும், இணைந்து பாதுகாப்பு அணிவகுப்பு மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டம், பாளையம் உட்கோட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட, இராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் இருந்து, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெரால்ட் அலெக்சாண்டர் அவர்களது தலைமையில். பாளையம் உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு சந்திரசேகர் அவரது முன்னிலையில், கம்பம் போக்குவரத்து காவல் ஆய்வாளர்
அ தங்கமணி மற்றும் இராயப்பன்பட்டி காவல் ஆய்வாளர் சகிதமாக, துணை ராணுவ படையினர் மற்றும் பாளையம் உட்கொட்ட காவல் துறையினர் 200க்கும் மேற்பட்டோர். இந்த பாதுகாப்பு ஊர்வலத்தினை மேற்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.