Police Recruitment

பிணையில் வெளிவந்தவர்களுக்கு பிடி கட்டளை

பிணையில் வெளிவந்தவர்களுக்கு பிடி கட்டளை

ராயபுரம் பாதாள விக்னேஸ்வரர் கோவில் தெருவை சேர்ந்த கணேசன் மகள் ராணி என்ற செல்வராணி,
இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு மதுரை ஆண்டாள்புரம் அக்ரினி வளாகத்தில் உள்ள ஒரு வீட்டில் வீட்டு வேலைக்காக சேர்ந்துள்ளார், அந்த வீட்டிலிருந்த 24 அரை பவுன் தங்க நகையை திருடியுள்ளார்,
மேற்படி திருடிய நகையை சென்னை ராயபுரம் பாதாள விக்னேஸ்வரர் கோவில் தெருவில் வசிக்கும் மணி என்பவரது மகன் கோபாலகிருஷ்ணனிடம் விற்பதற்காக திருட்டு நகையை கொடுத்துள்ளார் .

நகையை திருடிய குற்றத்திற்காக ராணி என்ற செல்வராணியையும் , திருட்டு நகையை பெற்றதற்கான குற்றத்திற்காக கோபாலகிருஷ்ணனையும் கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்திருந்தனர்.
மேற்படி இரண்டு எதிரிகளும் பிணையில் வெளிவந்துள்ளனர். பிணையில் வெளிவந்த இருவரும் தொடர்ந்து நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாத காரணத்தினால் , கடந்த 6 12 2023 அன்று பிடிகட்டளை பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் இருந்த நிலையில் பிணையதாரர்களுக்கு நீதிமன்றத்தால் அபராதம் விதிக்கப்பட்டு, செலுத்தப்பட்டுள்ளது .
தற்பொழுது எதிரிகள் இருவரையும் தேடப்படும் குற்றவாளிகளாக மதுரை குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 4, அவர்களால் அறிவிக்கப்பட்டு, வருகிற ஜூன் 4-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகும் படி அறிவித்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published.