தூத்துக்குடி மாவட்டம், தாளமுத்து நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நேற்று பகுதியில் சூதாட்டம் ஆடிய 4 பேர் கைது – பணம் ரூபாய் 1100/- மற்றும் சீட்டுக் கட்டுகள் பறிமுதல்.
தாளமுத்து நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று (22.05.2021) எஸ்.ஐ ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார் கே.வி.கே நகரில் ரோந்து சென்ற போது பூபாண்டியாபுரத்தைச் சேர்ந்த சுப்பையா மகன் இசக்கிமுத்து (20), கோவில்பிள்ளை விளையைச் சேர்ந்த முப்பிடாரி மகன் குமார் (41), லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் சுடலைமுத்து (50) மற்றும் குமரன் நகரைச் சேர்ந்த பெருமாள் மகன் ஆறுமுகசாமி (46) ஆகிய 4 பேரும் பணத்திற்காக சட்டவிரோதமாக சீட்டு கட்டுகளை வைத்து சூதாட்டம் ஆடிக்கொண்டிருந்தது தெரியவந்தது. ஆகவே போலீசார் 4 பேரையும் கைது செய்து, அவர் வைத்திருந்த பணம் ரூபாய். 1100/- மற்றும் சீட்டுக் கட்டுகளை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.