25.5.2021 உணவின்றி தவிப்போற்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கிய சென்னை பெருநகர காவல் துறை உதவி ஆணையர் திரு .கௌதமன் (சட்டம் ஒழுங்கு )அவர்களுடன் DR.பசுமை மூர்த்தி
அதிவேகமாக பரவிவரும் கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக சென்னை பெருநகரத்தில் வீடின்றி வாழ்வோர் அதிகம் உள்ளனர்.அவர்கள் உணவு சாப்பிட முடியாமல் அவதிப்படுகின்றனர்.இவற்றை கருத்தில் கொண்டு முழு ஊரடங்கு மத்தியிலும் சிறியவர் பெரியோர் பாதசாரிகள் ஆகிய அனைவருக்கும் தினம் தோறும் உணவு வழங்கியும் மற்றும் முககவசம் தண்ணீர் பாட்டில் சானிடைசர் கொடுத்தும் வருகிறார் சமூக ஆர்வலர் DR.பசுமை மூர்த்தி அவர்கள் மற்றும் மக்களுக்காக தன்னுடைய பணியை சேவை என்று கருதாமல் தியாகமாக செய்து வருகிறார் அடையாறு காவல்துறை உதவி ஆணையர் திரு.கௌதம் இப்படி பட்ட மனிதநேயமிக்க பணிகளை செய்யும் இவர்களை அப்பகுதியில் உள்ள அநேகர் பாராட்டி வருகின்றனர்.