மதுரை,விளாத்தூரை சேரந்தவரிடம், சாத்தமங்கலத்தை சேரந்த நான்கு நபர்கள் வழிப்பறி, கீழவளவு போலீசார் விசாரணை
மதுரை மாவட்டம் கருப்பாயியூரணி அருகே உள்ள விளாத்தூரை சேர்ந்தவர் பிரபு, இவர் மதுரை மாவட்டம் கீழவளவு அருகே உள்ள சாத்தமங்கலத்தில் உள்ள அவரது உறவினர் ஜெகதாம்பாள் என்பவருக்கு உடல்நிலை சரியில்லை என அவரை பார்ப்பதற்காக கடந்த 22 ம் தேதி வந்துள்ளார். இரவு நேரமானதால் அதிகாலை ஊருக்கு திரும்பி சென்றுள்ளார் அப்போது அவர் சாத்தமங்கலம் நடுப்பட்டி அய்யனார் கோவில் அருகே வந்த போது நான்கு நபர்கள் பிரபுவை வழி மறித்து அவர் கையில் வைத்திருந்த பணம் 50 ஆயிரத்தையும் கத்தியை காட்டி மிரட்டி பறித்து சென்றுள்ளனர், இது தொடர்பாக பிரபு கீழவளவு காவல்நிலையத்தில் புகார் அளித்தார் புகாரை பெற்றுக்கொண்ட காவல்நிலைய ஆய்வாளர் திரு. சார்லஸ் அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு பாலமுருகன் அவர்கள் வழக்கு பதிவு செய்து மேற்படி நித்தியன் என்பவர் கைது செய்தனர், மேலும் அவர்கள் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்துள்ளனர், மற்ற குற்றவாளிகள் நடுப்பட்டியை சேர்ந்த சுந்தரேஷன்,சாத்தமங்கலத்தை சேர்ந்த மனோஜ், அதே பகுதிரை சேர்ந்த பொன்முத்து மூவரையும் தேடி வருகின்றனர்.