ஊரடங்கை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் தூத்துக்குடி ராஜ்மஹாலில் வைத்து இன்று மாற்றுத் திறனாளிகள்,மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் 60 பேருக்கு அரிசிப் பை மற்று காய்கறி தொகுப்புகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில் பொது மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும், முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும் அடிக்கடி கைகளை கிருமிநாசினி மற்றும் சோப்பு போட்டு சுத்தம் செய்ய வேண்டும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் மேலும் அரசு நடைமுறைப்படுத்தியுள்ள இந்த ஊரடங்கு உத்தரவை பொதுமக்களாகிய நீங்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். கொரோனா தொற்றிலிருந்து நம்மை நாம் பாதுகாத்து கொள்ள முடியும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர்.திரு. கனேஷ் ,தூத்துக்குடி மத்திய பாகம் காவல்நிலைய பொறுப்பு ஆய்வாளர் திருமதி. சாந்தி ஆகியோர் செய்திருந்தனர்.
இதில் தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கோபி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.