திருச்சி மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளராக பா.மூர்த்தி நியமனம்!
தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களில் ஐ.ஜி. மற்றும் டி.ஐ.ஜி.க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், நேற்று (05/06/2021) மாவட்ட அளவிலான 27 காவல்துறைக் கண்காணிப்பாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக முனைவர் பா.மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சேலம் நகர குற்றம் மற்றும் போக்குவரத்து துணை ஆணையராக பணியாற்றி
வந்த நிலையில்
திருச்சி மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல்
திருச்சி மாநகர
சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக பணியாற்றி வந்த பவன்குமார் ரெட்டி திருவண்ணாமலை மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளராகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.