24 மணி நேரத்தில் கூற்றவாளிகளை கண்டுபிடித்த ஒட்டன்சத்திரம் தனிப்படைப் போலீசாருக்கு எஸ்.பி., ரவளிப்பிரியாகாந்தபுனேனி,IPS.,அவர்கள் வெகுமதி
கடந்த மே மாதம் 26 ம் தேதி ரெட்டியார்சத்திரம் அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் காமாக்ஷிபுரம் முருகனை கத்தியால் குத்தி விட்டு தப்பினர். ஒட்டன்சத்திரம் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் இளஞ்செழியன் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். காளையர் கோவிலை சேர்ந்த மோகன்பாபுவை விசாரித்ததில் குற்றவாளிகள் சிவகங்கை அருகே கீழ்வாணியங்குடியை சேர்ந்த குட்டை சங்கர் வயது 28/21, பூபதி வயது 22/21, என தெரிந்தது. இருவரும் காரைக்குடியில் வழிப்பறியில் ஈடுபட்டதற்காக சிறையில் இருப்பதும் தெரிந்தது. இருப்பினும் குற்றவாளிகளை 24 மணி நேரத்திற்குள் கண்டுபிடித்த ஒட்டன்சத்திரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. இளஞ்செழியன், காவலர் சீனிவாசன், வேளாங்கன்னி, மாரீஸ்வரன் ஆகியோருக்கு எஸ்.பி., திருமதி ரவளிப்பிரியாகாந்தபுனேனி,IPS., அவர்கள் வெகுமதி வழங்கி பாராட்டினர்.