திண்டுக்கல்லில் கொரோனா ஊரடங்கு விதிகளை மீறியவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
கொரோனா பரவலை தடுக்க அமலில் உள்ள ஊரடங்கை மீறியதாக திண்டுக்கல் மாவட்டத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. தேவை இன்றி வெளியில் சுற்றியதாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன இது தவிர ஆர்பாட்டத்தில் ஈடுபடுதல் அனுமதி இன்றி மக்கள் ஒரே இடத்தில் கூடியதற்கு காரணமாக இருந்தது என பல்வேறு வகையில் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. மேலும் கடந்த மே 10 முதல் நேற்று வரை ஊரடங்கை மீறியதாக 92 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அதில் பங்கேற்ற 860 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.