மதுரை, செல்லூர் பகுதியில் போதை மாத்திரை விற்ற நபர்கள் கைது, செல்லூர் போலீசாரின் நடவடிக்கை
மதுரை டவுன் செல்லூர் D2, காவல் காவல் நிலைய சார்பு ஆய்வளர் திரு. ஜான் அவர்கள், நிலைய ஆய்வாளர் திரு. அழகர் அவர்களின் உத்தரவின்படி கடந்த 9 ம் தேதி மாலை 5.30 மணியளவில், தலைமை காவலர் திரு.ரவி, செந்தில்பாண்டி, முதல் நிலை காவலர் திரு.ராஜேஸ், மற்றும் திரு. சிலம்பரசன் ஆகியோருடன் ரோந்துப் பணியில், இருந்தனர். அப்போது மதுரை செல்லூர், குலமங்கலம் மெயின் ரோட்டில் மண்ணெண்ணை பல்க் அருகே சிலர் சந்தேகத்திற்குறிய வகையில் நின்று இருந்தனர் அவர்கள் போலீசாரை பார்த்தவுடன் ஓட எத்தனித்தனர் உடனே காவலர்கள் அவர்களை மடக்கி பிடித்து விசாரித்த போது அவர்கள் மதுரை, செல்லூர் அஹிம்சாபுரம் 3 வது தெருவை சேர்ந்த செல்வம் மகன் லோகேஷ் வயது 22/21, செல்லூர் கீழத்தோப்பை சேர்ந்த ராஜேந்தின் மகன் சஞ்சீவ்குமார் வயது 22/21, மீனாம்பாள்புரத்தே சேர்ந்த அறிவழகன் மகன் தீனதயாளன் வயது 20/21, மற்றும் செல்லூர் சிவன் கோவில் தெரு ஐஸ்வர்யா காம்ளக்ஸ் பின் புறம் வசிக்கும் செல்வம் மகன் அஜீத் வயது 20/21 என தெரிய வந்தது. அவர்களை சோதனை இட்டதில் அவர்களிடம் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும், அதிக போதை தரும் மாத்திரைகள் இளஞர்களுக்கும், இனம் தெரியாத நபர்களுக்கும் அதிக விலைக்கு விற்று லாபம் சம்பாதிக்கும் நோக்கத்தில் வைத்திருந்தனர், மேலும் அதை யாராவது தடுத்தால் அவர்களை தாக்குவதற்கு பயங்கரமான ஆயுதங்களான கத்தி, அரிவாள், மற்றும் உருட்டுக் கட்டைகள் வைத்திருந்தனர், அவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டதை தொடர்ந்து அவர்களை கைது செய்து, நிலையம் அழைத்து வந்து ஆய்வாளர் திரு. அழகர் அவர்களின் உத்தரவின்படி வழக்கு பதிவு செய்து சார்பு ஆய்வாளர் திரு ஜான் அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.