ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மருத்துவர் தின வாழ்த்து தெரிவித்தார்
ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் உலக மருத்துவர் தினத்தை முன்னிட்டு மருத்துவர்களின் சேவையை பாராட்டி இன்று ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. V.சசிமோகன் மாவட்ட மருத்துவ அலுவலர் ,மருத்துவ கண்காணிப்பாளர், ஆகியோருக்கு மருத்துவர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். அவரின் உத்தரவின்படி மாவட்டத்திலுள்ள அனைத்து உட்கோட்ட காவல் கண்காணிப்பாளர்கள், காவல் நிலைய ஆய்வாளர்கள், அனைவரும் தங்கள் பகுதியில் உள்ள அரசு மருத்துவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.
