மதுரை தெற்கு வாசல் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை, அதிரடி நடவடிக்கையெடுத்த B5, காவல்நிலைய போலீசார்
மதுரை மாநகர் தெற்குவாசல் B5, காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு.P.சோமு அவர்கள் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக நேற்று காலை 10.45 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, மதுரை ஒண்டிமுத்து மேஸ்த்திரி வீதியில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்றிருந்த ஒருவர் காவலர்களை கண்வுடன் ஓட எத்தணித்தவரை போலீசார் வளைத்துப் பிடித்து விசாரித்த போது அவன் தெற்குவாசல் லாடபிள்ளை குறுக்கு சந்தை சேர்ந்த கருப்பசாமி மகன் முருகேசன் வயது 43/21,என தெரிய வந்தது, அவனை சோதனை செய்து பார்த்ததில் அவனிடம் 10 மது பாட்டில்கள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, அரசு மது பானக்கடையிலிருந்து மது பாட்டில்களை வாங்கி மது கடை அடைத்தபின்பு ஆதாயம் கருதி அதிக விலைக்கு விற்பதற்காக வைத்திருந்ததை அவன் ஒப்புக் கொண்டதை தொடர்ந்து அவனை போலீசார் கைது செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர், அதன்பின் நிலையம் அழைத்து வந்து அவன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
