
டெல்லியில் தொடர் மோதல் போக்கில் ஈடுபடும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை கோரி காவல்துறை தலைமையகத்தை போலீசார் முற்றுகையிட்டனர்.
கடந்த சனிக்கிழமை அன்று திஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வாகனங்களை நிறுத்துவது தொடர்பாக போலீசாருக்கும், வழக்கறிஞர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலால் நீதிமன்றம் போர்க்களமானது.
இதேபோல் நேற்றும் கர்கர்டூமா ((karkardooma)) நீதிமன்றத்தில் மோதல் ஏற்பட்டது. மேலும், போலீஸ் ஒருவரை வழக்கறிஞர்கள் தாக்கும் வீடியோவும் வெளியாகி கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் வழக்கறிஞர்கள் தொடர் மோதல் போக்கில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டியும் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், ஐ.டீ.ஓ பகுதியில் உள்ள காவல்துறை தலைமையகத்தை சீருடையுடன் போலீசார் முற்றுகையிட்டனர். கருப்பு ரிப்பன்களை அவர்கள் கட்டி இருந்தனர்.
ச. அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர் மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப்பின் இளைஞரணி தலைவர் சிவகங்கை மாவட்டம்.