நெடுஞ்சாலைத் துறையின் அலட்சியத்தால் அடிக்கடி நிகழும் விபத்துக்கள்.
மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை
தேசிய நெடுஞ்சாலையில் முன்னறிவிப்பு எச்சரிக்கை பலகைகள் இல்லாமல் திடீரென சாலையை இரண்டாகப் பிரித்து அமைக்கப்பட்ட சிமெண்ட் கட்டுமான ஒருவழிப்பாதையால்
ஒரே நாளில் ஆறு விபத்துகள் ஏற்பட்டுள்ளன.
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை – தொண்டி
தேசிய நெடுஞ்சாலையில் நாட்டரசன்கோட்டை தண்ணீர்பந்தல்
பேருந்து நிறுத்தம் அருகே நாட்டரசன்கோட்டை விலக்கு ரோட்டிலிருந்து வரும் வாகனங்கள் விபத்தில் சிக்காதிருப்பதற்காக நெடுஞ்சாலையை
இரண்டாகப் பிரித்து திடீரென அமைக்கப்பட்ட ஒரு வழிப்பாதையால் நேற்று ஒரே நாளில் மூன்று கார்கள் மூன்று பைக்குகள் என மொத்தம் 6 விபத்துக்கள் ஒரே நாளில் ஏற்பட்டுள்ளன
சாலையின் மையத்தில் அமைக்கப்பட்டிருக்கும் சிமெண்ட் கட்டு டிவைடரில் நேரடியாக மோதி வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகின்றன.
எந்தவிதமான முன்னெச்சரிக்கை அடையாளப் பலகைகளோ சாலைக்குறியீடுகளோ பிரதிபலிப்பான்களோ இல்லாமல் திடீரென கட்டப்பட்டிருக்கும் இருவழிப்பாதை டிவைடரில் எதிர்பாராதவிதமாக வாகன ஓட்டிகள் சிமெண்ட் கட்டையில் நேரடியாக மோதி விபத்துக்குள்ளாகின்றனர்.
சாலையின் இடது புறத்தில் மிகப்பெரிய பள்ளம் இருப்பதும் அதனால் சற்று சாலையின் மையத்திலோ வலதுபுறத்திலோ வாகனங்களை இயக்குபவர்கள் திடீரென குறுக்கிட்ட இந்த சிமெண்ட்கட்டை டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானதாக விபத்துக்குள்ளான பயணிகள் தெரிவித்தனர்.
தேசியநெடுஞ்சாலைத் துறையினரின்
இந்த அலட்சியமான மெத்தனப்போக்கால் தொடர்ந்து ஏற்பட்டுவரும் விபத்துகளைத் தடுக்க
மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கூறிவருகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுத்து நிலைமையைச் சீர் செய்யுமா ? என்றும் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கேள்வி கேட்டுவருகின்றனர்.
