மதுரை அனுப்பானடி அருகே கேட்டரிங் வேலைக்கு சென்ற பெண் மாயம், தெப்பகுளம் போலீசார் விசாரணை
மதுரை மாநகர், தெப்பகுளம் B3, காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியானஅனுப்பானடி கிறிஸ்தவத் தெரு சரச் அருகில் வசிக்கும் வேளாங்கன்னி, நிர்மலாமேரி தம்பதியினர் வேளாங்கன்னி அவர்கள் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள். மூத்த பெண் நித்தியா வயது 32/21, இவரை பிரிட்டோ சேவியர் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்து அவர்களுக்கு 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர். இளைய மகள் பிரேமா வயது 28/21 என்பவரை மணி என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்து அவர்கள் தனியே வாழ்ந்து வருகிறார்கள். மூத்த மகள் நித்தியா தன் கணவருடன் தன் தாய் வீட்டருகே வசித்து வருகிறார். இவரது கணவர் பிரிட்டோ சேவியருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு வாரமாக தனது சொந்த ஊரான கல்லம்பட்டியில் வசித்து வந்தார், இவரது மனைவி தனது குழந்தைகளுடன் தனது வீட்டில் இருந்துள்ளார். இவர் அனுப்பானடி E. B ஆபீஸ் அருகில் கேட்டரிங் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவர் கடந்த 13 ம் தேதி வழக்கம் போல் காலை 5.45 மணியளவில் வேலைக்கு சென்றுள்ளார். வேலைக்கு சென்றவர் திரும்பி வரவில்லை அவரை எங்கு தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை எனவே தெப்பகுளம் B3, காவல்நிலையத்தில் இவரை கண்டுபிடித்துக் கொடுக்குபடி புகார் மனு அளித்தனர். புகார் மனுவை பெற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர் திரு தமிழ்செல்வன் அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு. கிருஷ்ணன் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.