மதுரை, செல்லூர் பகுதியில் 5 பைசாவிற்கு பிரியாணி வாங்க முண்டியடித்த மக்கள்
பக்ரீத் பண்டிகையையொட்டி மதுரையை சேர்ந்த அட்சயா என்பவர் செல்லூர் பகுதியில் புதிதாக பிரியாணிக் கடை திறந்தார்.
மேலும் அவர் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதன்படி 5 பைசா நாணயத்துடன் வருபவர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அங்கு பிரியாணி வாங்க 5 பைசா நாணயத்துடன் 500 க்கும் மேற்பட்டோர் நேற்று திரண்டனர் இதனை எதிர்பார்க்காத கடை ஊழியர்கள் திகைத்தனர். 5 பைசா கொண்டு வரும் 50 நபர்களுக்கு பிரியாணி வழங்க முடிவு செய்திருந்த அவர்கள் கூட்டம் அதிகமாக கூடியதால் கடையின் கதவுகள அடைத்தனர். அங்கு அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் முக கவசம் அணியாமலும் முண்டியடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த செல்லூர் காவல்நிலைய ஆய்வாளர் திரு. மாடசாமி அவர்களின் உத்தரவின்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று கடை ஊழியர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். கடை மூடப்பட்டதால் போலீசார் அங்கிருந்த அனைவரையும் கலைந்து போக செய்தனர். பிரியாணிக் கடை திறந்த அன்றே அடைக்கப்பட்டது.
