மதுரை செல்லூர் பகுதியில் குட்கா விற்ற முதியவரை செல்லூர் போலீசார் கைது செய்தனர்
மதுரை டவுன், செல்லூர் D 2, காவல்நிலையம் ஆய்வாளர் திரு மாடசாமி அவர்களின் உத்தரவின்படி நிலைய சார்பு ஆய்வாளர் திருமதி. லெட்சுமி அவர்கள், மற்றும் முதல் நிலை காவலர்கள் சிலம்பரசன், ராஜேஸ் ஆகியோருடன் சட்டம் ஒழுங்கு, மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக ரோந்து பணியில் கடந்த 27 ம் தேதி ஈடுபட்டிருந்தனர். அப்போது, செல்லூர் கீழ வைத்தியநாதபுரம் பகுதியில் குட்கா பொருட்கள் விற்பனை நடைபெருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கே ஒரு பெட்டிக்கடையில் ஒரு முதியவர் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.500 மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்து அவரை விசாரித்த போது அவர் அதே பகுதியை சேர்ந்த பழனியாண்டி மகன் போஸ் வயது 70/21 என தெரிய வந்தது. அவரை கைது செய்து நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர், அவர் தகுந்த பிணையில் விடுவிக்கப்பட்டார்.