
மதுரை, திருநகர் அருகே தேவி நகரில் சட்டவிரோதமாக மது பாட்டில் விற்பனை, திருநகர் போலீசார் நடவடிக்கை எடுத்து விற்பனை செய்த நபரை கைது செய்தனர்
மதுரை, திருநகர் W1, காவல்நிலைய காவல் ஆய்வாளர் திருமதி. அனுஷாமனோகரி அவர்களின் உத்தரவின்படி சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. மகேந்திரன் அவர்கள் கடந்த 29 ம் தேதி மாலை 7.30 மணியளவில் சரகத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, தேவி நகர் சந்திப்பில் சட்ட விரோதமாக மது பாட்டிகளை விற்பனை செய்து கொண்டிருந்த நபரை கைது செய்து அவரை சோதனை செய்த போது 7 மது பாட்டில்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிய வந்தது, அவற்றை பறிமுதல் செய்து அவரை நிலையம் அழைத்து வந்து அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகாறார்கள்.
