
கொள்ளை முயற்சியில் ஈடுபட முயன்ற 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கொள்ளை முயற்சியில் ஈடுபட முயன்ற 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள புவனகிரி பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பெருமாத்தூர் பகுதியில் 5 பேர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை செய்துள்ளனர்.
அதில் தளபதி நகரில் வசித்து லட்சுமணன், கீழமணக்குடி பகுதியில் வசித்து வரும் வெங்கடேசன், கீரப்பாளையம் பகுதியில் வசித்து வரும் விக்னேஷ், புவனகிரி பகுதியில் வசித்து வரும் மாரிமுத்து, மற்றும் மற்றும் பகுதியில் வசித்து வரும் மூர்த்தி ஆகிய 5 பேர் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
மேலும் இவர்கள் 5 பேரும் சேர்ந்து புவனகிரி பகுதியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட முயன்றதும் விசாரணையின்போது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்கள் 5 பேரையும் கைது செய்ததோடு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
