சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல் நிலையங்களுக்கு சாலை பாதுகாப்பு உபகரணங்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் விபத்து தடுப்பு நடவடிக்கை
திருவாரூர் மாவட்டத்தில் 29 சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள் மற்றும் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி ஆகிய போக்குவரத்து காவல் நிலைய எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் விபத்து தடுப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்கமைவு பணிகளை செய்ய பொதுமக்கள் நலன் கருதி தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்ட சாலை பாதுகாப்பு நிதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. C.விஜயகுமார் IPS., அவர்கள் தேவையான சாலை பாதுகாப்பு உபகரணங்களை வாங்கி அதனை நேற்று 24 ம் தேதி அனைத்து காவல் நிலையங்களுக்கும் வழங்கினார்கள்.
