
தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பல்வேறு வழக்குகளில் சம்மந்தப்பட்ட ரவுடி உட்பட 4 பேர் கைது – கைது செய்த செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவின்பேரில் ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. வெங்கடேசன் அவர்கள் மேற்பார்வையில் செய்துங்கநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சதீஷ் தலைமையில் காவலர் ஆல்பர்ட் உட்பட போலீசார் நேற்று செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுந்தரபாண்டி சாஸ்தா கோவில் அருகே ரோந்து சென்ற போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த தாதன்குளம் ஆர்.சி தெற்குத் தெருவைச் சேர்ந்த சந்தனராஜ் மகன் 1) தேவராஜ் வயது47 கருங்குளம் பாரதியார் தெருவைச் சேர்ந்த தங்கராஜ் மகன் 2) கனகராஜ் வயது 28, கருங்குளம் மாதா கோவில் தெருவைச் சேர்ந்த சுப்பையா மகன் 3) வெங்கடசுப்பிரமணியன் என்ற மூக்காண்டி வயது 48 மற்றும் செய்துங்கநல்லூர் தென்னஞ்சோலைத் தெருவைச் சேர்ந்த அருணாச்சலம் மகன் 4) கொம்பையா வயது 54 ஆகியோரை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் அப்பகுதியில் கூட்டுக்கொள்ளையில் ஈடுபடத் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து செய்துங்நல்லூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. ராஜாசுந்தர் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
மேற்படி எதிரிகளில் தேவராஜ் மீது செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு உட்பட 8 வழக்குகளும், கனகராஜ் மீது 2 வழக்குகளும், வெங்கடசுப்பிரமணியன் என்ற மூக்காண்டி மீது கொலை முயற்சி வழக்கு உட்பட 7 வழக்குகளும், கொம்பையா மீது 2 வழக்குளிலும் ஈடுபட்டுள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்படி எதிரிகளை கைது செய்த செய்துங்கநல்லூர் காவல் நிலைய போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.
