
மணப்பெண் இணையதளத்தில் ஜொள்ளு விட்ட 20 ஆண்களிடம் பணம் அபேஸ்? திருமணமாகாத கவர்ச்சியான இளம்பெண் போல் பேசி பணம் பறித்துள்ளார்.

ஹைதராபாத், செகுந்தராபாத் சாயினிக்பூரி கண்டிகொண்டா பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் வாசுதேவன் வயது 34 என்பவர் மென்பொருள் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் தனக்கு திருமணம் செய்வதற்காக வரன் தேடும் ஒரு திருமண இணையதளத்தில் அழகான மணப்பெண் தேடியுள்ளார்.
அந்த இணைய தளத்தில் திவ்யா வயது 28 என்று ஒரு பெண்ணின் புகைப்படத்துடன் இருந்த ஐ.டியைப் பார்த்து மேற்படி வாசுதேவன் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
எதிர்முனையில் திவ்யா என்ற பெயரிலிருந்த பெண்ணும் சம்மதம் தெரிவித்து தனது செல்போன் எண்ணை கொடுத்துள்ளார்.
இருவரும் ஒருவருக்கொருவர் நெருக்கமாக பேசிக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் அந்த திவ்யா என்ற பெண், தன்னுடைய தோழிக்கு அவசரமாக ரூபாய் 40,000/- தேவைப்படுகிறது.
தனக்கு உடனே அனுப்புமாறு ஒரு வங்கி கணக்கை அனுப்பி வைத்துள்ளார்.
இவரும் அந்த வங்கி கணக்கிற்கு கடந்த 08.07.2021 ரூபாய் 40,000/-ஐ அனுப்பியுள்ளார்.
அதனை தொடர்ந்து மேலும் பணம் தேவைப்படுவதாக ரூபாய் 40,000/-ம் அனுப்புமாறு கூறியதால், திரும்பவும் வாசுதேவன் 04.08.2021 அன்று ரூபாய் 40,000/-ஐ அதே வங்கிக் கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.
இந்நிலையில் மேற்படி வாசுதேவன் அந்தப் பெண்ணிடம், உன்னை நேரில் சந்திக்க வேண்டும் என்று கூறி விலாசம் கேட்டு, அந்த விலாசத்திற்கு சென்று விசாரித்தபோது அப்படி திவ்யா என்ற பெயரில் யாரும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டு மோசடி செய்யப்பட்டதையறிந்த வாசுதேவன் புகார் அளித்தார்.
அவரது புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மேற்படி மோசடி குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் அவருக்கு உத்தரவிட்டார்.
சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில் சைபர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
வாசுதேவன் பணம் அனுப்பிய வங்கி கணக்கு முகவரியை விசாரித்தபோது தூத்துக்குடி மாவட்டம், நாலுமாவடியைச் சேர்ந்த தங்கவேலு மனைவி கீதா வயது 36 என்ற பெயரில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு…
அவரை கைது செய்து விசாரித்ததில், இவர்தான் திவ்யா என்ற பெயரில் திருமண இணையதளத்தில் தனது உண்மையான புகைப்படத்தை பதிவேற்றம் செய்யாமல் வேறொரு கவர்ச்சியான அழகான பெண்ணின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ளதும், மேற்படி வாசுதேவனை ஏமாற்றி பணம் மோசடி செய்ததையும் கீதா ஒப்புக்கொண்டார்.
இதே போன்று 20க்கு மேற்பட்ட நபர்களை ஏமாற்றியுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அவரிடமிருந்து ஏமாற்றுவதற்கு பயன்படுத்திய 4 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
