
படிக்கட்டில் நிற்க வேண்டாம் என கூறிய நடத்துனரை தாக்கிய பயணி, போலீசார் நடவடிக்கை
திருச்சி துவாகுடி துப்பாக்கி தொழிற்சாலையில் இருந்து சத்திரம் பஸ் நிலையம் செல்லும் அரசு பேரூந்தில் உக்கடை பாலத்தின் அருகே ஒருவர் பஸ்ஸில் ஏறியுள்ளார் அவர், படிக்கட்டில் நின்று பயணம் செய்துள்ளார், இதை அந்த பஸ் நடத்துனர் ராமசாமி அவர்கள் படிக்கட்டில் நிற்க வேண்டாம் மேலே ஏறி பஸுக்குள் வரும்படி கூறியுள்ளார், இதனால் ஆத்திரமடைந்து படிக்கட்டில் நின்று பயணம் செய்தவர் நடத்துனரிடம் தகராறு செய்து நடத்துனரை தாக்கியுள்ளார், 30/08/21 அதிகாலை 1.30 மணியளவில் நடத்துனர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் புகாரை பெற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர் திரு பரணிதரன் அவர்கள் துரிதமாக நடவடிக்கை எடுத்தார்.தலைமை காவலர் செல்வபதி, ஜாரஜ்ஜேக்கப், மற்றும் பெண் முதல் நிலை காவலர் மலர்விழி ஆகியோர் நடத்துனரை தாக்கிய நபரை கண்டுபிடித்து கைது செய்து நீதி மன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
