
தமிழக கவர்னர் மாற்றம்
தமிழகத்திற்கு புதிய கவர்னராக ஸ்ரீ ரவிந்திர நாராயணன் ரவி நியமிக்கப்பட்டுள்ளார். ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரியான இவர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். 1976 முதல் கேரள மாநிலத்தில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி இருக்கிறார். கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் முதல் நாகலாந்து மாநில கவர்னராக இருந்து வருகிறார். இவரை தமிழக கவர்னராக நியமித்து ஜனாதிபதி ராமநாத் கோவிந்த் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
தற்போதைய தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநிலத்தில் முழு நேர கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் பஞ்சாப் மாநிலத்தில் பொறுப்பு கவர்னராக உள்ளார்.
