Police Department News

திருச்சியில் நேற்று (14.09.2021) இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 9 பேரை கைது

திருச்சியில் நேற்று (14.09.2021) இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 9 பேரை கைது

திருச்சி வாமடம் பகுதியைச் சேர்ந்த விஜய் என்கிற வாழைக்காய் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 10 க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனையடுத்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அனைவரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் நேற்று அதிகாலை நிசாந்த் (23) என்ற இளைஞர் ராமகிருஷ்ண மேம்பாலம் அருகே உள்ள மாநகராட்சி கழிப்பறைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த நபர்கள் நிசாந்தை அரிவாளால் சரமாரியாக வெட்டி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதில் படுகாயமடைந்த நிசாந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக காந்தி மார்கெட் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதனையடுத்து பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய நிஷாந்த் (21) நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீஸார், சந்தேகத்தின் பேரில் 9 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.