
நெல்லை மாவட்டம் சாம்பவர்வடகரை காவல் நிலையத்திற்குட்பட்ட ஊர்மேல்அழகியான் கிராமத்தை சேர்ந்த, முருகன் என்பவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருந்ததால், (Dossier Criminal History Sheet) தொடங்கி காவல்துறை அவரை தொடர்ந்து, கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில்,17 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முருகனை, 1999-ஆம் ஆண்டு இடைக்கால் என்ற ஊரில் கண்டபோது தான் இப்பொழுது எந்த குற்ற செயலிலும் ஈடுபடவில்லை, எனக்கூறிய முருகனை அக்கம் பக்கத்தில் விசாரித்ததில் அவர் கூறியது உண்மை என்பதும் தெரியவந்தது மனிதாபினம் என்ற பட்சத்தில், உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களிடம் முருகனுக்கு நன்னடத்தை சான்றிதழ் பெற்றுத்தந்து, தன்னை தொழில் செய்ய ஊக்குவித்து, தனது வாழ்க்கைக்கு பெரும் உதவியாக இருந்த 1999-ஆம் ஆண்டு சாம்பவர்வடகரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.சேகர் அவர்கள் 20ஆண்டுகள் கழித்த, தற்பொழுது நெல்லை மாநகரத்தில் சமூக நீதி மற்றும் மனிதஉரிமைகள் பிரிவு காவல் உதவி ஆணையாளராக பணிபுரிந்து வருவதை அறிந்த முருகன் தனது மனைவியுடன் வந்து 15-11-2019-ம் தேதியன்று, நெல்லை மாநகர காவல் ஆணையாளர் திரு. தீபக் மோ.டாமோர் (இ.கா.ப) அவர்கள் முன்னிலையில், சமூக நீதி மற்றும் மனிதஉரிமைகள் பிரிவு காவல் உதவி ஆணையாளர் திரு.சேகர் அவர்களுக்கு மாலை அணிவித்து நன்றியினை தெரிவித்தார்கள்.
உதவி ஆணையர் திரு.சேகர் அவர்களின் செயல்பாடு அனைவரின் பாராட்டையும் பெற்றது. தண்டிப்பது மட்டுமல்ல காவல்துறை,நல் வழிகாட்டுவதும் காவல்துறைதான் என்பதை இச்சம்பவம் உணர்த்தியுள்ளது .
போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக
VRK.ஜெயராமன் MA,Mphil மாநில செய்தியாளர்
அருப்புக்கோட்டை