மதுரையில் செல் போன் திருடனை விரட்டிப் பிடித்த காவலர்கள்
சிவகங்கை மாவட்டம், சோழபுரத்தை சேரந்த சதாசிவம் மகன் சந்திரன் வயது 35/21, இவர் தன் மனைவிக்கு உடல் நிலை சரியில்லாததால் கடந்த 10 நாட்களாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 26 ம் தேதி சுமார் 12.30 மணியளவில் மருத்துவ மனையில் காத்திருப்போர் அறை அருகே தனது செல் போனில் பேசிக்கொண்டு நடந்து வரும் போது பின்னால் வந்த நபர் திடீரென அவரது கையிலிருந்த செல் போனை பறித்துக் கொண்டு அரசு மருத்துவ மனை மெயின் ரோட்டு பக்கமாக ஓட ஆரம்பித்தார், உடனே அவர் சத்தம் போட அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சார்பு ஆய்வாளர் திரு. சண்முகநாதன், மற்றும் E4, காவல்நிலைய எழுத்தர் திரு.மணிகண்ட பிரபு Gr1, அங்கு பாதுகாவல் பணியிலிருந்த செக்யூரிட்டி விருமாண்டி ஆகியோர் துரத்திச் சென்றனர். மருத்துவ மனையை தாண்டி பிணவறை வரை விரட்டி திருடி சென்றவனை மடக்கி பிடித்து E3, காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்ததில் அவன் மதுரை நெல்பேட்டை சீனி ராவுத்தர் தெருவை சேர்ந்த யாகூப் மகன் அபுபக்கர் சித்திக் வயது 30 என தெரிந்தது உடனே ஆய்வாளர் பாலமுருகன் அவர்களின் உத்தரவின்படி அவன் மீது வழக்கு பதிவு செய்து அவனை நீதி மன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
