மதுரை மதிச்சியம் பகுதியில் ரவுடிகளை கட்டுப்படுத்துவது குறித்து ஆட்டோ ஒட்டுநர்களுடன் மதிச்சியம், E-2 காவல்நிலைய ஆய்வாளர், ஆலோசனை கூட்டம்
மதுரை மாநகர், E2, மதிச்சியம் காவல் நிலையத்திற்கு உள்பட்ட பகுதியில் ரவுடிகளை கண்காணிப்பது, குறித்து, அப்பகுதி ஆட்டோ ஒட்டுநனர்களுடன் நேற்று மதிச்சியம் E2, காவல்நிலைய ஆய்வாளர் திரு. சாது ரமேஷ் அவர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினார்
மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே ரவுடிகள் நடமாட்டம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், நேற்று முன் தினம் ஒரே நாளில் 100 க்கும் மேற்பட்ட ரவுடிகள், கைது செய்யபட்டனர்.
இந்த நிலையில் மதுரை மாநகரில் இ௫க்க கூடிய முக்கிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஆட்டோ ஒட்டுநனர்கள் உடன் ஆலோசனை நடத்தினர்.
மதுரை மதிச்சியம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஆட்டோ ஒட்டுநர்கள், மதிச்சியம் அண்ணா பஸ் நிலையம், வைகை கரை பாலம் பகுதி ஆட்டோ ஒட்டுநர்கள் ஆகியோர்கள் மற்றும் பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர். மதிச்சியம் காவல் நிலைய ஆய்வாளர், தி௫.சதுரமேஷ் அவர்கள் மற்றும், சார்பு ஆய்வாளர்,திரு. நாகராஜ் அவர்கள் மற்றும் காவலர்கள், கூட்டத்தில் ரவுடிகளின் நடமாட்டம் குறித்தும் மற்றும் பல்வேறு வகையான விழிப்புணர்வை ஆட்டோ ஒட்டுநர்களுக்கு ஏற்படுத்தினர்.
