மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக லிப்டில் சிக்கிய ஊழியர்களை மீட்ட தீயணைப்பு படையினர்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தற்போது கூடுதல் அலுவலக கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த கூடுதல் கட்டிடம் 39 கோடியே 19 லட்சம் செலவில் கட்டப்பட்டு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திறக்கப்பட்டது அந்த கட்டிடம் ஒரு தரைத் தளம் மற்றும் 3 மாடிகளை கொண்டது எனவே அங்கு லிப்ட் வசதி இயக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 4.30 மணியளவில் விக்கிரமங்கலத்தை சேர்ந்த ரேஷன் கடை ஊழியர்களான அமுதா மற்றும் மாற்றுத்திறனாளியான பிரபு ஆகிய இருவரும் லிப்ட் மூலம் 2 ம் தளத்திற்கு சென்றனர். அப்போது அந்த லிப்ட் திடீரென பழுதாகி இடையிலேயே நின்று விட்டது. இதனால் செய்வதறியாது தவித்த அவர்கள் கூச்சலிட்டனர், இந்த கூச்சலை கேட்டு அங்கிருந்த ஊழியர்களும் பொது மக்களும் திரண்டனர், தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் டாக்டர் அனில் சேகரும் அங்கு வந்தார். பின்னர் தல்லாகுளம் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நிலைய அலுவலர் திரு.சுப்பிரமணி அவர்கள் மற்றும் தீயணைப்பு காவலர்கள் ஈடுபட்டு நீண்ட நேரம் போராடி லிப்ட் ஓபன் லீவரை உடைத்து கதவை திறந்து லிப்டில் சிக்கியவர்களை மீட்டனர்.
