
மதுரை, ஆனையூர் பகுதியில் AC யில் மின் கசிவு காரணமாக தீ விபத்து தம்பதியினர் உடல் கருகி பலி. கூடல்புதூர் D3, காவல் நிலையத்தில் விசாரணை
மதுரை ஆனையூர் பகுதியில் வீட்டின் படுக்கை அறையில் இருந்த ஏசி சாதனம் வெடித்து நேரிட்ட தீ விபத்தில் சனிக்கிழமை அதிகாலை தம்பதி உயிரிழந்தனர்.
ஆனையூர் எஸ்விபி நகர் பியர்ல் ரெசிடன்சி பகுதியைச் சேர்ந்தவர் சக்தி கண்ணன் வயது 45 தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.
குழந்தைகள் இருவரும் கீழே உள்ள அறையில் வெள்ளிக்கிழமை இரவு உறங்கிய நிலையில், மாடியில் உள்ள அறையில் சக்தி கண்ணன் மற்றும் அவரது மனைவி சுபா ஆகிய இருவரும் உறங்கியுள்ளனர்.
இந்நிலையில், நள்ளிரவில் சக்தி கண்ணன், அவரது மனைவி இருந்த அறையில் உள்ள ஏசியில் திடீரென மின் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்துள்ளது. இதனால் அறையில் சிக்கிக் கொண்ட இருவரும் தீயில் சிக்கி இறந்தனர்.
இதனையடுத்து வீட்டிலிருந்து புகை வெளியேறுவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
மேலும் அவர்கள் வீட்டுக்குள் வந்து கீழ் அறையில் இருந்த இரு பிள்ளைகளயும் மீட்டனர்.
தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் திரு. சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனக்கு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்
இதுகுறித்து தீ விபத்தில் இறந்தவர்களின் உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் கூடல்புதூர் D3, காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. ஆறுமுகம், சார்பு ஆய்வாளர் திரு. வெம்புலு ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர் இந்த தீ விபத்தில் ரூபாய் இரண்டு லட்சம் வரை சேதம் கணக்கிடப்பட்டுள்ளது, மேலும் விபத்து சம்பந்தமாக காவல் ஆய்வாளர் திரு. ஆறுமுகம் அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
