காணாமல் போன மொபைல் போனை உரியவர்களிடம் ஒப்படைத்த காரியாபட்டி காவல்துறையினர்
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி காவல் நிலையத்தில் மொபைல் போன்கள் காணாமல் போனது, திருடு போனது
தொடர்பாக வரும் புகார்களை விருதுநகர் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் நவீன தகவல் தொழில்நுட்ப உதவியுடன் காரியாபட்டி காவல்துறையினர் மீட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது காரியாபட்டி காவல் நிலையத்தில் காணாமல்போன, திருடுபோன 3 மொபைல் போன்களை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் காரியாபட்டி போலீசார் மீட்டனர்.
இந்த மொபைல் போன்களை காரியாபட்டி காவல் ஆய்வாளர் மூக்கன் இன்று உரியவர்களிடம் ஒப்படைத்தார். மொபைல் போன்களை பெற்றுக் கொண்ட உரிமையாளர்கள் காரியாபட்டி காவல் துறைக்கு நன்றி தெரிவித்தனர்.
உடன் காரியாபட்டி காவல் சார்பு ஆய்வாளர்கள் அசோக்குமார், தமிழழகன், தலைமை காவலர் சிவபாலன் ஆகியோர் இருந்தனர்.